அனைத்து அரசு மருத்துவமனைக்கு சென்றாலே பணம் தலைவிரித்து ஆடும் செக்யூரிட்டிகள் அராஜகம் நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு.?
சென்னை 29 டிசம்பர் 2022 அனைத்து அரசு மருத்துவ மனைக்கு சென்றாலே பணம் தலை விரித்து ஆடும் செக்யூரிட்டிகள் அராஜகம் நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு.?
சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவ மனையில் செக்யூரிட்டிகள் ஆரஜாகம் பணம் இல்லாமல் ஏழ்மையில் வாழக்கூடியவர்கள் மட்டுமே அரசு மருத்துவமனைக்கு வருகிறார்கள்.
ஆனால் அதை பயன்படுத்தி பணம் பரிக்கும் நோக்கிலேயே செயல்படும் செக்யூரிட்டிகள் அதில் இந்த செக்யூரிட்டியும் பணம் தரவில்லை என்பதால் தகாத வார்த்தைகள் திட்டுவதும் பணம் கொடுத்தால் அவர்களுக்கு ராஜபோகமாக மருத்துவ சிகிச்சை அளிக்க ஒத்துழைப்பு அளிப்பதுமாக இருந்து வருகிறார்.
இவரைப் பற்றி பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
யாரிடம் சொன்னாலும் எவரிடம் சொன்னாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது என் பேக்ரவுண்ட் பெரிய பேக்ரவுண்டில் இருந்து வந்திருக்கிறேன் என்று கூறுகிறார்.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளின் பெற்றோர்களை தகாத வார்த்தையில் திட்டுவதாகவும் பணம் கொடுத்தால் மட்டும் அட்ஜஸ்ட் செய்து கொள்கிறார்.
இவர் மீது அரசு மருத்துவத்துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மருத்துவமனைக்கு வரும் மக்களின் பணிவான வேண்டுகோள் அதோ போல் அரசு மருத்துவ மனையில் செக்யூரிட்டிகள் அராஜகம் தலை விரித்து ஆடுகிறது சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அமைச்சர் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மருத்துவ மனைக்கு வரும் நோயாளிகளின் பணிவான வேண்டுகோள்.
எக்மோரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனை மட்டும் அல்லாமல் ராஜீவ் காந்தி மருத்துவமனை ஸ்டான்லி மருத்துவமனை கீழ்ப்பாக்கம் மருத்துவமனை அனைத்திலும் ஏழைகளுக்கு பணம் இருந்தால் மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் நடவடிக்கை எடுக்குமா இந்த தமிழ் அரசு பொறுத்திருந்து பார்ப்போம்.