இளம்பெண் படுகொலை உடல் சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீச்சு!

இளம்பெண் படுகொலை உடல் சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீச்சு!

சென்னை 10 ஆகஸ்ட் 2023 கடையநல்லூர் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே வலசை கிராமம் உள்ளது.

அதன் அருகில் சேர்ந்தமரம் சாலையில் கண்டமான் குளம் என்னும் குளத்துகரை அருகில் பயன்பாடு இல்லாத கிணறு உள்ளது.

அந்த கிணற்றில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் பிணம் மிதப்பதாக கடையநல்லூர் போலீசாருக்கு அப்பகுதினர் தகவல் தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில் புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணன், கருப்பசாமி ஆகியோர் விரைந்து வந்தனர்.

தொடர்ந்து கடையநல்லூர் தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் உடனடியாக அங்கு விரைந்து வந்து கிணற்றுக்குள் வீசப்பட்ட மூட்டையை வெளியில் எடுத்து கொண்டு வந்தனர்.

அதனை பிரித்து பார்த்த போது அதில் இருப்பது இளம் பெண்ணின் சடலம் என தெரியவந்தது.

அந்த இளம்பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவரை கொன்று வீசியவர்கள் யார்? என்பது குறித்து கடையநல்லூர் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *