நகரின் மத்தியில் கழிவுகளை கொட்டி பயிரை மேயும் வேலி? நகராட்சி நிர்வாகத்துக்கு கடும் எதிர்ப்பு. தெரிவித்தனர்.!!
நகரின் மத்தியில் கழிவுகளை கொட்டி பயிரை மேயும் வேலி? நகராட்சி நிர்வாகத்துக்கு கடும் எதிர்ப்பு. தெரிவித்தனர்.!!
உடுமலை நகரின் மத்தியிலுள்ள குட்டை திடல், குப்பைக்கிடங்காக மாற்றப்படும்.
நிலையில், சாக்கடை கால்வாய் துார்வாரிய கழிவுகள் நேற்று கொட்டப்பட்டதால், லாரியை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுகாதாரம் காக்க வேண்டிய நகராட்சியே மக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதியில், கழிவுகளை கொட்டியது அனைத்து தரப்பிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
உடுமலை நகரின் மத்தியில், தளி ரோட்டில், வருவாய்த்துறைக்கு சொந்தமான, 91 சென்ட் குட்டை திடல் உள்ளது.
40 ஆண்டுகளுக்கு முன்பு வரை, சுற்றுப்புற பகுதிகளில் பெய்யும் மழை நீர், குட்டையில் சேகரிக்கப்பட்டு, நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாகவும், கரையில் கடைகள், கால்நடைகளுக்கு தண்ணீர், பொதுமக்களுக்கு பொது உபயோகம் மற்றும் பொழுது போக்கு அம்சமாகவும் இருந்தது.
நகர வளர்ச்சி காரணமாக, நீர் வழித்தடங்கள் மறிக்கப்பட்டு, மண் கொட்டப்பட்டு, குட்டை திடலாக மாற்றப்பட்டது.
குட்டை திடலின் மத்தியில், காந்தி சிலை உள்ளது.
குட்டை திடலை சுற்றிலும், கிளை நுாலகம், போலீஸ் ஸ்டேஷன், வணிக வளாகம், பள்ளி வாசல், நாராயணகவி மணி மண்டபம், கோவில்கள் அமைந்துள்ளன.ஆண்டுதோறும், நகரின் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவின் போது, பொருட்காட்சி மற்றும் திருவிழா கடைகள், பொழுது போக்கு அம்சங்கள் என, 20 நாட்கள் களைகட்டும் திடலாகவும், அரசியல் கட்சிகள் மற்றும் பொது விழாக்கள் நடக்கும் மைதானமாகவும் உள்ளது.