நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 95-வது பிறந்தநாளை முன்னிட்டு உருவப்படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்திய தமிழக முதல்வர் !!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 95-வது பிறந்தநாளை முன்னிட்டு உருவப்படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்திய தமிழக முதல்வர் !!
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95-வது
பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய உருவப்படத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் திரையுலக பிரபலங்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தமிழகத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இந்த பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை அடையாறில் உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலைக்கும், அவரது உருவப்படத்திற்கும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95-வது பிறந்தநாள்
விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், வேலு,நேரு நடிகர்கள் பிரபு மற்றும் விக்ரம் பிரபு, ராம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோன்று நடிகர் சங்க வளாகத்திலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.