பல லட்சம் பயனர்களை  நெட்ஃப்ளிக்ஸ்  இழந்துள்ளது.!

நெட்ஃப்ளிக்ஸ் பல லட்சம் பயனர்களை இழந்துள்ளது.!

சென்னை 30 ஏப்ரல் 2023 நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம், முதல் காலண்டில் நெட்ஃப்ளிக்ஸ் சுமார் பத்து லட்சம் பயனர்களை இழந்துள்ளது.

தற்போதைய சூழலில் ஒவ்வொரு வீட்டிலும் டிவி சேனல்கள் இருக்கிறதோ இல்லயோ.. நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம் என பல்வேறு ஓடிடி தளங்கள் சப்ஸ்கிரிப்ஷன் கட்டாயம் இருக்கும்.

அந்த அளவிற்கு ஓடிடி தளங்கள் வளர்ச்சி அடைந்துள்ளன. குறிப்பாக நெட்ஃப்ளிக்ஸ் தளத்தை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

அதேபோல் பயனர்கள் தங்களின் நெட்ஃப்ளிக்ஸ் பாஸ்வேர்டுகளை நண்பர்கள், சொந்தங்கள், என எல்லோருக்கும் பகிர்ந்துகொள்வதால் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் சந்தாதாரர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது.

இதன் காரணமாக நெட்ஃப்ளிக்ஸ் சேவையில் பயனர்கள் தங்களின் பாஸ்வேர்டுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நடவடிக்கைக்கு முற்றிப்புள்ளி வைக்கப் போவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தது.

இந்நிலையில் பயனர்கள் தங்களின் பாஸ்வேர்டுகளை மற்றவர்களுடன் பகிர்வதை கண்டறிந்து தடுக்கும் தொழில்நுட்ப முறைகளை கடந்த பிப்ரவரி மாத வாக்கில் ஸ்பானிஷ் பயனர்களிடையே நெட்ஃப்ளிக்ஸ் செயல்படுத்தியது.

மேலும் 5.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 500 கட்டணம் கொண்ட திட்டத்தை அறிமுகம் செய்தது.

இந்த புதிய நடவடிக்கை காரணமாக சுமார் பத்து லட்சம் பயனர்களை நெட்ஃப்ளிக்ஸ் இழந்துள்ளது.

அதாவது, 2023 முதல் காலண்டில் நெட்ஃப்ளிக்ஸ் சுமார் பத்து லட்சம் பயனர்களை இழந்துள்ளது என்று ஆய்வு நிறுவனமான கந்தர் (Kantar Market Research) தெரவித்துள்ளது.

அதேபோல் இந்த இழப்பிற்கு, பயனர்கள் தங்களின் கடவுச்சொல்லை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை நெட்ஃப்ளிக்ஸ் நிறுத்துவது தான் காரணம் என கூறப்படுகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *