100 ஆண்டுகளுக்கு முன் உலகைச் சுற்றி வந்த பயணிகள் சொகுசுக் கப்பல்!

100 ஆண்டுகளுக்கு முன் உலகைச் சுற்றி வந்த பயணிகள் சொகுசுக் கப்பல்!

சென்னை 06 ஏப்ரல் 2023 பயணிகள் சொகுசு கப்பல் என்ற ஒன்று தற்போது சுற்றுலாவில் பிரபலமானதாக உள்ளது. சகல வசதிகளுடன் கூடிய சொகுசுக் கப்பலில் குறிப்பிட்ட இடம் வரை சென்று சுற்றிப் பார்த்துவிட்டு அதிலேயே திரும்புவது தான் அது. க்ரூஸ் ஷிப் என்பார்கள் இதை.

100 ஆண்டுகளுக்கு முன்னரே இத்தகைய சொகுசுக் கப்பல் பயணம் நியூயார்க்கில் ஆரம்பித்து 6 மாத காலம் இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சுற்றி வந்து மீண்டும் நியூயார்க்கில் முடிவடைந்திருக்கிறது.

முதல் தொடர் சொகுசுப் பயணக் கப்பல் 1923ல் தனது 6 மாதக் கால உலகப் பயணத்தை முடித்து நியூயார்க்கிற்கு வெற்றிகரமாக திரும்பியது.

இதில் மற்றொரு சிறப்பு என்னெவெனில் அந்த காலத்திலேயே நூற்றுக்கணக்கான பெண் பயணிகள் இந்த சொகுசுக் கப்பலில் பயணித்துள்ளனர்.

அதில் எலனார் மற்றும் கிளாடியா பெல்ப்ஸ் ஆகியோர் இந்த உலகப் பயணத்தை தங்களது புகைப்படங்கள் மற்றும் எழுத்துக்கள் மூலம் ஆவணமாக்கியுள்ளனர். அதன் மூலம் தான் இந்த சொகுசுக் கப்பல் பற்றி இன்றும் அறிய முடிகிறது.

தற்போது அந்த ஆவணம், தெற்கு கரோலினா பல்கலைக்கழகத்தின் புகைப்பட ஆய்வு சேகரிப்பில் பத்திரப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் தங்கள் தாயாருடன் உலகப் பயணம் சென்றுள்ளனர்.

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் என்ற நிறுவனம் இப்பயணத்திற்காக எஸ்எஸ் லகோனியா என்ற கப்பலை குத்தகைக்கு எடுத்தது. இந்தக் கப்பல் 2,200 பயணிகளை ஏற்றிச் செல்லத்தக்க வகையில் கட்டப்பட்டது.

Read Also  கடந்த 10 ம் தேதி மாலத்தீவு தலைநகர் மாலியில் நடந்த தீ விபத்தில் 10 நபர்கள் மரணம் அடைந்தார்கள்.!

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் முதல் உலகப் பயணத்திற்கு இதனை குத்தகைக்கு எடுத்த போது, பயணிகள் எண்ணிக்கையை வெறும் 450 ஆக சுருக்கியது.

கூட்டம் இல்லாமல், கப்பலின் ஆடம்பரத்தை அவர்கள் அடுத்த 6 மாதமும் அனுபவிக்க வேண்டும் என இதனைச் செய்துள்ளனர்.

இதில் அப்போது பயணித்தவர்கள் அனைவரும் பெரும் செல்வந்தர்கள். இந்தக் கப்பலில் டிக்கெட் பெற்று பயணிப்பதை கவுரவமாக கருதினர்.

நவம்பர் 21, 1992 அன்று லகோனியா சொகுசுக் கப்பல் நியூயார்க் துறைமுகத்திலிருந்து தனது தொடர் உலகப் பயணத்தை துவங்கியது.

சூயஸ் மற்றும் பனாமா கால்வாய்களை கடந்து எகிப்து, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் நமது இந்தியா வழியாக வலம் வந்தது.

சரியாக 130 நாட்கள் பயணித்து மார்ச் 30, 1923ல் மீண்டும் நியூயார்க்கிற்கு திரும்பியது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *