சேரன் எக்ஸ்பிரசில் 16 பெட்டிகள் கழன்று ஓடியது: திருவள்ளூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு!!

சென்னை 07 நவம்பர் 2022 சேரன் எக்ஸ்பிரசில் 16 பெட்டிகள் கழன்று ஓடியது: திருவள்ளூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு!!

இரவில் எழுந்த பயங்கர சத்தத்தால் அலறிய பயணிகள் சேரன் எக்ஸ்பிரசில் 16 பெட்டிகள் கழன்று ஓடியது: திருவள்ளூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு!!

சென்னை: சென்னை சென்ட்ரலில் இருந்து நேற்று முன்தினம் இரவு கிளம்பிய சேரன் எக்ஸ்பிரஸ் ரயில், திருவள்ளூர் ரயில்  நிலையத்தில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தபோது இன்ஜினுடன் இணைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் 16 பெட்டிகள் தனியாக கழன்று தண்டவாளத்தில் தனியாக ஓடியது. அதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இரவு நேரம் என்பதால் பலர் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கொக்கி உடையும் சத்தம் பயங்கரமாக இருந்ததால், பயணிகள், ரயில்நிலையத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அதே சமயம், இன்ஜினுடன் 7 பெட்டிகள் எந்த பிரச்னையும் இல்லாமல் சென்று கொண்டிருந்தது.  இது குறித்து போலீசார், ரயில்வே அதிகாரிகள் விசா ரணை நடத்தி வருகின்றனர். சென்னை சென்ட்ரலில் இருந்து நேற்று முன்தினம் கோவைக்கு  இரவு 10 மணியளவில் சேரன் எக்ஸ்பிரஸ் புறப்பட்டு சென்றது. இந்த ரயிலில் இன்ஜினுடன் சேர்த்து மொத்தம் 23 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தன. இரவு 11 மணியளவில் ரயில் திருவள்ளூர் ரயில் நிலையத்தின் 4வது பிளாட் பாரம் வழியாக சென்றபோது, எஸ் 7 மற்றும் எஸ் 8 ஆகிய 2 பெட்டிகளை இணைக்கும் இரும்பு கொக்கி பலத்த சத்தத்துடன் உடைந்தது.

இதில் சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ்8 பெட்டி முதல் ரயில் கார்டு பெட்டி வரை பிரிந்து தனியாக கழன்று ஓடியது. ரயில் என்ஜினுடன் சேர்ந்த 7 பெட்டிகள் மட்டும் பாதுகாப்பாக சென்று கொண்டிருந்தது. 16 பெட்டிகள் உள்ள ரயில், இன்ஜின் இல்லாமல் டிராக்கில் ஓடியதால், திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியில் உறைந்து கூச்சலிட்டனர். காரணம் 16 ரயில் பெட்டியில் ஆயிரக்கணக்கான  கொக்கி உடைந்த சத்தம் கேட்டு ரயிலில் இருந்த பயணிகள் அலறினர்.

Read Also  மயிலாடுதுறையில் அரசு பேருந்து ஒன்று ஓட்டுநர் இல்லாமல் திடீரென ஓடி மதில் சுவரில் மோதி விபத்து. பேருந்தில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.!!

இந்நிலையில், ஓடும் ரயிலில் இருந்து பயங்கர சத்தம் வந்ததை உணர்ந்த இன்ஜின் டிரைவர் 7 பெட்டிகள் கொண்ட ரயிலை  ரயிலை நிறுத்தினார். இதற்கிடையே தனியாக கழன்று ஓடிய 16 பெட்டிகளும் இழுக்க இன்ஜின் இல்லாததால் மெதுவாக திருவள்ளூர் ரயில் நிலைய 4வது நடைமேடையில் வந்து நின்றது. இதனால் பதற்றம் அடைந்த பயணிகள் அலறியடித்து ரயிலில் இருந்து இறங்கினர். இதில், துண்டான ரயில் பெட்டியில் இருந்து கீழே இறங்க முற்பட்ட பயணிகள் சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இது குறித்து தகவல் தெரிந்து தெற்கு ரயில்வே மீட்பு படையை சேர்ந்த அதிகாரிகள், டெக்னிஷீயன்கள் என 30க்கும் மேற்பட்டோர் பெரம்பூர் லோகோ பணிமனையில் இருந்து திருவள்ளூருக்கு விரைந்தனர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு, பின்னர் ரயில் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று  இணைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இரவு ஒரு மணியளவில் சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் திருவள்ளூரில் இருந்து தாமதமாக புறப்பட்டு சென்றது. ரயில் பெட்டிகளை இணைக்கும் கொக்கி துண்டானது ஏன். தினசரி ெசல்லும் ரயிலில் ஏற்பட்ட பராமரிப்பு குளறுபடிக்கு யார் காரணம்.

ஊழியர்கள் சரி ரயில் கிளம்பும் முன்பாக சரி பார்த்தார்களா என்று உயரதிகாரிகள் சம்பவ இடத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து திருவள்ளூர் ரயில்வே போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தெற்கு  ரயில்வே விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

விசாரணைக்கு பிறகு இதுகுறித்து தெளிவான விளக்கம் அளிக்கப்படும் என தெற்கு  ரயில்வே அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *