தூத்துக்குடியில் மனைவியை தாக்கிய வட்டாச்சியர் மீது வழக்கு.!
சென்னை 17 நவம்பர் 2022 தூத்துக்குடியில் மனைவியை தாக்கிய வட்டாச்சியர் மீது வழக்கு.!
தூத்துக்குடி மடத்தூரை சார்ந்தவர் ஞானமுத்து மகன் ஞானராஜ்.இவர் திருச்செந்தூர், சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வட்டாச்சியராக பணிபுரிந்து தற்போது தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் வட்டாச்சியராக பணி செய்துவருகின்றார். இவருக்கும் அதே பகுதியை சார்ந்த பெண்ணிற்கும் 15.5.2009 அன்று தூத்துக்குடி அண்ணாநகரில் வைத்து திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருந்து வருகின்றனர். வட்டாச்சியர் ஞானராஜ் என்பவருக்கும் உடன்பணி செய்துவரும் பெண்ணிற்கும் கள்ளதனமாக தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனை மனைவி கண்டித்துள்ளார். இதனால் இருவக்குமிடையே பிரச்சினை ஏற்பட்டு கடந்த 23.6.2021 அன்று மனைவியை அடித்து கொடுமைபடுத்திகாயத்தினை ஏற்படுத்தியதினால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். மேற்படி வட்டாச்சியர் தனது அதிகார பலத்தினால் அவரது மனைவியை மருத்துவமனையை விட்டு வெளியேற்றியுள்ளார். இதனால் உயிருக்கு பயந்து தனது குழந்தைகளை அழைத்து கொண்டு அவரது மனைவி அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும் தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்தியதாக 28.6.2021 அன்று தூத்துக்குடி சிப்காட் மற்றும் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கும் புகார் அனுப்பியுள்ளார். ஆனால் காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் அவரது மனைவியிடம் பாதுகாப்பாக இருந்து வந்த இரண்டு குழந்தைகளையும் வட்டாட்சியர் ஞானராஜ் தனது காரினை வைத்து வேறு நபர்களை கொண்டு கடத்தியுள்ளார். மேலும் அவரது மனைவியின் கல்வி சான்றிதழ்களையும் அபகரித்து வைத்து கொண்டு மனரீதியான கொடுமையினை ஏற்படுத்தி வந்துள்ளார். இதனால் மனவேதனையும், மன உளைச்சலும் அடைந்த அவரது மனைவி 8.9.2022 அன்று இது சம்பந்தமாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டியும் கல்வி சான்றிதழ்களை மீட்டுத்தரக் கோரியும் தூத்துக்குடி மூன்றாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் முறையீடு அளித்துள்ளார். மனுவினை கோப்புக்கு எடுத்துக்கொண்ட நீதித்துறை நடுவர் வட்டாச்சியர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதன்பேரில் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குற்ற எண் 10/2022ஆக மனைவியை அடித்து கொடுமைபடுத்தியது உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டு வட்டாச்சியர் ஞானராஜை தேடி வருகின்றனர்.
இதனால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.