நடிகை ரம்பா கார் விபத்தில் உயிர் தப்பினார் இளைய மகள் சாஷா மருத்துவமனையில் அனுமதி.

சென்னை 01 நவம்பர் 2022  நடிகை ரம்பா கார் விபத்தில் உயிர் தப்பினார் இளைய மகள் சாஷா மருத்துவமனையில் அனுமதி.

நடிகை ரம்பாவின் கார் விபத்துக்குள்ளானதில் அவரும் மூத்த மகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பி இருக்கிறார்கள்.

நடிகை ரம்பாவின் இளைய மகள் சாஷா காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

ரம்பா, ”பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்துச் செல்லும் வழியில் எங்கள் கார் மற்றொரு கார் மீது மோதியது. இந்த விபத்தில் குழந்தைகளுடன் நான் உயிர் தப்பினேன்.

நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம்.

நானும் என் ஆயாவும் சிறு காயங்களுடன் சிகிச்சை முடிந்து மீண்டுவிட்டோம்.

என் குட்டி சாஷா இன்னும் மருத்துவமனையில் இருக்கிறார்” என்று தெரிவித்திருக்கிறார்.

உள்ளத்தை அள்ளித்தா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான ரம்பா, 90களில் கனவு கன்னியாக வலம் வந்தார்.

2019 ஆம் ஆண்டு தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரம்பாவுக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர் .

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ரம்பா, நடிகை மீனா வீட்டுக்கு அண்மையில் சென்றிருந்தார்.

நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில் , ஒரு போதும் நெகட்டிவ்வாக பேசாதீர்கள்.

காமெடிக்காக கூட இதை செய்ய வேண்டாம்.

நாம் பேசும் வார்த்தைகளை பாசிட்டிவாக மாற்றிக் கொண்டால் நம்முடைய வாழ்க்கையும் சிறப்பாக மாறும் என்று ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்திருந்தார்.

தனக்கு ஏற்பட்டிருக்கும் இந்த விபத்து குறித்து, ”மோசமான நாட்கள் கெட்ட நேரம்” என்று வேதனையுடன் குறிப்பிட்டு இருக்கிறார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *