விவசாயத் துறைக்கும் புதிய திறன்கள் தேவை பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
விவசாயத் துறைக்கும் புதிய திறன்கள் தேவை பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
சென்னை 20 அக்டோபர் 2023 இந்தியாவின் விவசாயத் துறைக்கும் புதிய திறன்கள் தேவை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிரத்தில் 511 திறன் மேம்பாட்டு மையங்களை பிரதமர் மோடி காணொளி மூலம் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது…
இன்று, இந்தியா தனக்கென மட்டுமல்ல, உலகத்துக்காகவும் திறமையான நிபுணர்களை உருவாக்குகிறது.
கிராமங்களில் துவங்கப்பட்டு திறன் மேம்பாட்டு மையங்கள் இளைஞர்களுக்கு உலக அளவில் வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்யும்.
இந்த மையங்கள் கட்டுமானம் தொடர்பான திறன்களை கற்பிக்கும். இந்தியாவின் விவசாயத் துறைக்கும் புதிய திறன்கள் தேவை. ரசாயனம் சார்ந்த விவசாய தொழில் நுட்பங்கள் விவசாய நிலத்தை சேதப்படுத்துகின்றன.
நீண்ட காலமாக, திறன் மேம்பாட்டில் அரசுகள் தீவிரம் காட்டவில்லை, அதற்கான தொலைநோக்கு பார்வையும் இல்லை.
தொழில்துறையில் தேவை மற்றும் இளைஞர்களிடையே திறமை இருந்த போதிலும், திறன் மேம்பாடு இல்லாததால், இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில் கடினமான சூழல் நிலவியது.
இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டின் வளர்ச்சி தேவை என்பதை எங்கள் அரசு புரிந்து கொண்டது.
திறன் மேம்பாட்டுக்காக தனித்துறையை உருவாக்கினோம்.
மத்திய அரசின் திறன் மேம்பாட்டு திட்டத்தால் ஏழை, தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் பயனடைந்துள்ளனர்.
திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1.3 கோடி இளைஞர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.