உலக இருதய தின அனுசிரப்பை முன்னிட்டு, ‘ரீஸ்டார்ட் ஹார்ட் ஃபவுண்டேஷன்’ – ஐ தொடங்கும் காவேரி மருத்துவமனை !!
சென்னை 25 செப்டம்பர் 2022 உலக இருதய தின அனுசிரப்பை முன்னிட்டு, ‘ரீஸ்டார்ட் ஹார்ட் ஃபவுண்டேஷன்’ – ஐ தொடங்கும் காவேரி மருத்துவமனை!!
சென்னையிலும் மற்றும் தமிழ்நாடெங்கிலும் முக்கிய அமைவிடங்களில் 100-க்கும் அதிகமான தானியக்க வெளியார்ந்த டீஃபைபிரிலேட்டர்கள் (உதறல் நீக்கி சாதனம்) நிறுவப்படவுள்ளன
- செம்மொழி பூங்கா, டைடல் பார்க் மற்றும் சுவாமி விவேகானந்தர் இல்லம் ஆகிய அமைவிடங்களில் இந்த ஃபவுண்டேஷன், தானியக்க செயல்பாடுள்ள வெளியார்ந்த டீஃபைபிரிலேட்டர்களை நிறுவியிருக்கிறது. திடீரென மாரடைப்பு ஏற்படும் நபர்களுக்கு சிகிச்சையளிக்க கையில் எடுத்துச் செல்லக்கூடிய, உயிர்காக்கும் சாதனங்களான இவை, குரலொலியின் மூலம் இயக்கப்படக்கூடியவை.
- அடுத்த மூன்று ஆண்டுகள் காலஅளவிற்குள், ஆட்டோமோட்டட் எக்ஸ்டர்னல் டீஃபைபிரிலேட்டர்கள் (AED) – ஐ பயன்படுத்த இம்மாநிலம் முழுவதிலுமிருந்து 10,000-க்கும் அதிகமான நபர்களுக்கு பயிற்சியளிக்கப்படும் மற்றும் அதன் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.
- பொது அமைவிடங்களில் உயிர்காக்க உதவும் இந்த AED-க்களை நிறுவுவதில் ஆதரவு வழங்க தாராள மனதுடன் 50 தனியார் நிறுவனங்கள் முனைப்புடன் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
சென்னை, 25 செப்டம்பர் 2022: தமிழ்நாட்டின் முதன்மை மருத்துவமனைகளுள் ஒன்றான காவேரி மருத்துவமனை, உலக இதய தின அனுசரிப்பையொட்டி ரீஸ்டார்ட் ஹார்ட் ஃபவுண்டேஷன் என்பதனை தொடங்கியிருக்கிறது. எண்ணிக்கையில் அதிகரித்து வரும் மாரடைப்புகள் பிரச்சனைக்கு தீர்வு காணவும், மாரடைப்பு ஏற்படாமல் தடுப்பதற்கு பொதுமக்களுக்கு கற்பிக்கவும் மற்றும் அவசர நிலைகளின்போது முதலுதவியாக உடனடி பதில்வினை சிகிச்சையை வழங்க அவர்களை திறனுள்ளவர்களாக ஆக்கவும் இந்த முனைப்புத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளை அமைப்பின் மூலம், செம்மொழி பூங்கா, டைடல் பார்க் மற்றும் விவேகானந்தர் இல்லம் (ஐஸ் ஹவுஸ்) ஆகிய இடங்களில் தானியக்க செயல்பாடு கொண்ட வெளியார்ந்த டீஃபைபிரிலேட்டர் சாதனங்கள் (AED)நிறுவப்பட்டுள்ளன. ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர். எழிலன் இவற்றை தொடங்கி வைத்தார்.
தானியக்க எக்ஸ்டர்னல் டீஃபைபிரிலேட்டர் (AED) என்பது, மாரடைப்பு ஏற்படும் ஒரு அவசரநிலை சூழலில் பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும். இந்த AED சாதன அமைப்பின் ஒரு பேட்டரி மற்றும் பேடு எலக்ட்ரோடுகள் போன்ற துணைச் சாதனங்கள் உள்ளடங்கும். இசிஜி எனப்படும் எலக்ட்ரோ கார்டியோகிராமில் கண்டறிந்து, இதய பாதிப்பு நிலையை உணரவும் மற்றும் ஒரு மின்அதிர்ச்சியை ஒரு பாதிக்கப்பட்ட நபருக்கு வழங்கவும் இவை அவசியமாகும். எளிதில் எந்த இடத்திற்கும் எடுத்துச் செல்லக்கூடிய இச்சாதனம், குரல் வழி நினைவூட்டல்களை, ஒன்றன் பின் ஒன்றாக அறிவுறுத்தல்களை வழங்குகிறது; AED –ஐ பயன்படுத்த குறைந்தபட்ச பயிற்சியினை பெற்றிருக்கும் எந்தவொரு நபராலும் இந்த அறிவுறுத்தல்களை பின்பற்ற முடியும் மற்றும் புது அமைவிடத்தில் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு நபரின் இதயஓட்ட லயத்தை மீண்டும் கொண்டு வருவதற்கு உதவ AED –ஐ பயன்படுத்த இயலும். இதன் மூலம் மேலதிக சிகிச்சைக்காக ஒரு ஆம்புலன்ஸ் வரும் வரை மாரடைப்பு ஏற்பட்ட நபரை உயிரிழப்பு ஏற்படாதவாறு தடுத்து வைத்திருக்க இயலும்.
சென்னையிலும் மற்றும் தமிழ்நாடு முழுவதிலும் பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் ஒன்றுகூடும் முக்கிய அமைவிடங்களில் 100-க்கும் அதிகமான டீஃபைபிரிலேட்டர் சாதனங்களை நிறுவுவது மீது இந்த ஃபவுண்டேஷன் சிறப்பு கவனம் செலுத்தும். இதற்கும் கூடுதலாக, AED சாதனங்களை பயன்படுத்துவது மீது மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளர்கள் அடங்கிய குழுவினரால் பள்ளிகள், கல்லூரிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களிலுள்ள 10,000-க்கும் அதிகமான நபர்களுக்கு பயிற்சியளிக்கப்படும் மற்றும் பயிற்சியின் முடிவில் சான்றிதழ்களும் அவர்களுக்கு வழங்கப்படும். நிறுவப்பட்டுள்ள AED இயந்திரங்களுக்கு தினசரி அடிப்படையில் வழக்கமான பராமரிப்பு பணியையும் காவேரி மருத்துவமனையைச் சேர்ந்த குழுவினர் மேற்கொள்வார்.
ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டாக்டர். எழிலன், “நமது நாட்டில் பொது இடங்களில் AED-களை பயன்படுத்துவது என்பது இன்னும் பிரபலமடையாமல், வளரும் நிலையிலேயே இருக்கிறது. அடிப்படை உயிர்காப்பு செயல்பாடுகளில் பயிற்சி பெறுவதற்கு பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் நாம் ஊக்கமளிப்பது அவசியம். ஒரு அவசரநிலை சூழல் என்பது, எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் நிகழக்கூடும். தாமதமின்றி வழங்கப்படும் சரியான முதலுதவியும், இடையீட்டு செயல் நடவடிக்கையும் ஒரு உயிரைக் காப்பாற்ற உதவும். இப்பயிற்சியை பெறுகின்ற காவல்துறை பணியாளர்களால் மக்களுக்கு இன்னும் சிறப்பாக சேவையாற்ற முடியும் என்று நான் நம்புகிறேன். ரீஸ்டார்ட் ஹார்ட் ஃபவுண்டேஷனின் இந்த தொடக்கம் உண்மையிலேயே சிறப்பானது மற்றும் பாராட்டுதலுக்குரியது. மக்களின் உயிரை காப்பாற்றுவது நிச்சயமாக நல்ல தாக்கத்தை உருவாக்கப்போகும் இந்த உன்னதமான முனைப்புத்திட்டத்தை தொடங்கி வைப்பது எனக்கு கிடைத்திருக்கும் கௌரவம் என்றே நான் கருதுகிறேன்,” என்று கூறினார்.
காவேரி மருத்துவமனையின் இணை – நிறுவனர் மற்றும் செயலாக்க இயக்குனர் டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் இந்நிகழ்வின்போது உரையாற்றுகையில் கூறியதாவது: “மாரடைப்பு மேலாண்மையில் கடந்த 50 ஆண்டுகளில் மருத்துவத்துறையில் முன்னேற்றங்கள் நிகழ்ந்திருக்கின்ற போதிலும் கூட, நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் திடீர் மாரடைப்பின் காரணமாக ஏறக்குறைய 8 இலட்சம் நபர்கள் உயிரிழக்கின்றனர். வெறும் 5% என்பதே உயிர்பிழைப்பு விகிதமாக இதில் இருப்பதால், மிக முக்கியமான மருத்துவ அவசரநிலைகளில் ஒன்றாக மாரடைப்பு இருக்கிறது. மாரடைப்பு ஏற்படும் நபர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவியை வழங்குவது மிகவும் இன்றியமையாதது. 70% –க்கும் அதிகமான மாரடைப்பு நிகழ்வுகள் மருத்துவமனைகளுக்கு வெளியேதான் நிகழ்கின்றன. ஒரு AED –ன் மூலம் இதயத்தை உரிய நேரத்திற்குள் “ரீஸ்டார்ட்” செய்வது (மீண்டும் இயங்கச் செய்வது) உயிர்பிழைப்பதற்கான வாய்ப்புகளை கணிசமாக அதிகரிக்கிறது. ஆகவே, அத்தகைய அவசரநிலை ஏற்படும் அமைவிடங்களில் தாமாக முன்வந்து, உடனடியாக நம்பிக்கையோடும் முதலுதவி இச்சிகிச்சையை வழங்குவதற்கு பொதுமக்களுக்கு கற்பிப்பதும், பயிற்சியளிப்பதும் பல உயிர்களை காப்பாற்ற உதவும். பெருநிறுவன சமூக பொறுப்புறுதி (சிஎஸ்ஆர்) செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த சிறப்பான செயல்திட்டத்திற்கு ஆதரவளிக்க பல பெருநிறுவனங்கள் தாராள மனதுடன் உறுதியளித்திருக்கின்றன.
அடிப்படை உயிர்காப்பு ஆதரவில் அவசியமான பயிற்சியை மேற்கொள்ளவும், உயிர்காக்கும் காவலனாக செயல்படவும் பொதுமக்கள் முன்வர வேண்டுமென்று நான் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.”