அதிமுக தலைமை அலுவலகத்தை சேதப்படுத்திய விவகாரம்: ஓ.பன்னீர்செல்வம் உள்பட 65 பேரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு!

சென்னை 02 செப்டம்பர் 2022 அதிமுக தலைமை அலுவலகத்தை சேதப்படுத்திய விவகாரம் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 65 பேரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு!

அதிமுக தலைமை அலுவலகம் சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில், சிபிசிஐடி டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் 4 இன்ஸ்பெக்டர்கள் குழு தனது விசாரணையை தொடங்கியுள்ளது.

அதிமுக பொதுக்குழு நடந்த ஆகஸ்ட் 11ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்று ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தை சூறையாடியதாகவும், முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாகவும், அலுவலகத்தை சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக, ராயப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் அளித்த புகாரின்படி, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 400 பேர் மீது ராயப்ேபட்டை போலீசார் 3 தனித்தனி வழக்கை 7 பிரிவுகளின் கீழ் பதிவு செய்தனர்.

அதில், எடப்பாடி ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த தனிப்புகாரின் படி ராயப்பேட்டை போலீசார் திருட்டு உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் மற்றும் பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் போலீசாரின் கைதுக்கு பயந்து எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என மொத்தம் 65 பேர் உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரில் மனு தாக்கல் செய்தனர். அவர்களுக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.இந்நிலையில், இந்த வழக்கு மாநகர காவல் துறையில் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதைதொடர்ந்து சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர், அதிமுக அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த சிபிசிஐடி டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் தனிக்குழு அமைத்து உத்தரவிட்டுள்ளார். டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் இயங்கும் குழுவில், செல்வின் சாந்தகுமார்.

Read Also  முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு இன்று நினைவு நாள்!

லதா, ரம்யா, ரேணுகா என 4 இன்ஸ்பெக்டர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஒவ்வொரு இன்ஸ்பெக்டருக்கும் தனித்தனி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி சிசிடிவி பதிவுகள், வீடியோ ஆதாரங்கள், வாகனம் சேதப்படுத்தியது.

அதிமுக அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் திருடி சென்றது என 4 இன்ஸ்பெக்டர்களும் தனித்தனியே தங்கள் வரம்புக்குள் விசாரணை நடத்துவர்கள். டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையிலான விசாரணை குழு தனது விசாரணையை தொடங்கியுள்ளது.

முதல்கட்டமாக வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் கலவரம் தொடர்பான வீடியோ பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் என வழக்கில் தொடர்புடைய அனைவரையும் நேரில் அழைத்து விசாரணை நடத்த டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையிலான குழு முடிவு செய்துள்ளது.

அதன்படி முதல்கட்டமாக ஓபிஎஸ் உட்பட 65 பேருக்கு தனித்தனியாக சம்மன் அனுப்பி நேரில் அழைக்க உள்ளனர். அதற்கான பணிகளை சிபிசிஐடி விசாரணை குழு செய்து வருகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *