18-வது ஐரோப்பிய நீரிழிவு பாத ஆய்வுக்குழு நிகழ்வில் எம்.வி. நீரிழிவு மருத்துவமனைக்கு விருது!

சென்னை 09 நவம்பர் 2022 18-வது ஐரோப்பிய நீரிழிவு பாத ஆய்வுக்குழு நிகழ்வில் எம்.வி. நீரிழிவு மருத்துவமனைக்கு விருது!

சென்னை: 09 நவம்பர் 2022: 2022 செப்டம்பர் 16-18 தேதிகளில் ஐரோப்பாவின் ஸ்லோவேகியா நாட்டின், பிராட்டிஸ்லாவா நகரில் நடைபெற்ற 18-வது ஐரோப்பிய நீரிழிவு பாத ஆய்வுக்குழு கூட்டத்தில் (DFSG) சென்னை, ராயபுரம் – எம்.வி. நீரிழிவு மருத்துவமனைக்கு இரண்டாவது பரிசு வழங்கப்பட்டிருப்பதை இன்று பெருமிதத்துடன் அறிவித்திருக்கிறது.

சென்னை, ராயபுரத்தில் அமைந்துள்ள இம் மருத்துவமனை பல ஆண்டுகளாக நீரிழிவுக்கான ஆராய்ச்சி மற்றும் சிகிச்சையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு மக்களுக்கு சிறப்பான சேவையாற்றி வருகிறது.  

DFSG எனப்படும் இந்நிகழ்வு, ஐரோப்பாவில் நீரிழிவால் பாதிக்கப்படும் பாதம் குறித்த மருத்துவ நிபுணர்களின் மிகப்பெரிய சந்திப்பு கூட்ட நிகழ்வாகும். ஐரோப்பா முழுவதிலுமிருந்து நீரிழிவு பாத சிகிச்சையில் நிபுணர்களாக செயலாற்றி வரும் பல மருத்துவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். 

இந்நிகழ்வின்போது, எம்.வி. நீரிழிவு மருத்துவமனை மற்றும் புரொஃபசர் எம். விஸ்வநாதன் நீரிழிவு ஆராய்ச்சி மையம், ராயபுரம்-சென்னை , பங்கேற்று “நீரிழிவு நிலையிலுள்ள நபர்களுக்கு இரத்தஓட்டத்தை அதிகரிப்பது மற்றும் அவர்களது கால்களை பாதுகாப்பது” என்ற தலைப்பு மீது ஒரு ஆராய்ச்சி கட்டுரையை சமர்ப்பித்தது. 

எம்.வி. மருத்துவமனையின் தலைவரும், தலைமை நீரிழிவியல் மருத்துவருமான டாக்டர். விஜய் விஸ்வநாதன் இந்த ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்து பேசியதாவது:

“ராயபுரம், நீரிழிவுக்கான எம்.வி. மருத்துவமனையில் ஆஞ்சியோகிராபி சோதனை செய்யப்பட்ட 130 நபர்களை உள்ளடக்கி ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

Read Also  மாரடைப்புடன், இதயக் கோளாறுள்ள 55-வயது பள்ளி ஆசிரியைக்கு  உயிர்காக்கும் பல்வேறு மருத்துவ செயல்முறைகளை வெற்றிகரமாக மேற்கொண்ட காவேரி மருத்துவமனையின் இதயவியல் மருத்துவர்கள்!  

இதில் 89 நபர்களுக்கு விளைவு தரவு இருந்தது. (நோயாளிகளின் சராசரி வயது: 63.8 ± 8.6 ஆண்டுகள் மற்றும் நீரிழிவு பாதிப்பின் சராசரி காலஅளவு என்பது, 16.1 ± 8.8 ஆண்டுகள் என்பதாக இருந்தது.

இந்த அனைத்து 89 நோயாளிகளுக்கும் கால்கள் மற்றும் பாதத்தில் குறைவான இரத்த சுழற்சி என்ற நிலையோடு நீரிழிவினால் பாதத்தில் ஏற்படும் புண்களும் இருந்தன   [PAD: புறவெளி தமனி நோய்].

ஆஞ்சியோபிளாஸ்டி மேற் கொள்ளப்பட்டவர்களுள் 76.3 % நபர்களுக்கு பெரிய அளவிலான உறுப்புநீக்கம் செய்வது தவிர்க்கப்பட்டது 

(முழங்காலுக்கு கீழே அல்லது முழங்காலுக்கு மேலே செய்யப்படும் உறுப்பு நீக்கமே, பெரிய உறுப்புநீக்கமாக கருதப்படுகிறது). 

ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்ட போதிலும் கூட 23.7% நோயாளிகளுக்கு பெரிய உறுப்புநீக்க சிகிச்சை செய்யப்படுவது அவசியமாக இருந்தது. 

கடுமையான, தீவிர நீரிழிவு பாத தொற்றுடன் மருத்துவமனைக்கு காலம் தாழ்த்தி தாமதமாக அவர்கள் வந்ததே இதற்குக் காரணம்.” 

PAD பாதிப்பும், நீரிழிவு பாத தொற்றும் இருந்த பெரும்பாலான நோயாளிகளுக்கு பெரிய அளவிலான உறுப்புநீக்கம் நிகழாமல் எங்களால் தடுக்க முடிந்தது மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டியின் மூலம் இவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது

என்று டாக்டர். விஜய் விஸ்வநாதன் குறிப்பிட்டார். 

இந்நிகழ்ச்சியின்போது பேசிய எம்.வி. மருத்துவமனையின் இடையீட்டு கதிர்வீச்சு சிகிச்சையியல் நிபுணர் டாக்டர். ஆர். ரவிக்குமார், “வெற்றிகரமான ஆஞ்சியோபிளாஸ்டி மருத்துவ செயல்முறையில் ஊன்ட் பிளஷ்” (Wound blush) என்பது மிக முக்கிய அம்சமாக இருக்கிறது.  ஆஞ்சியோபிளாஸ்டி செயல்முறைக்குப் பிறகு சிறப்பான ஊன்ட் பிளஷ் நிலையுள்ள எந்தவொரு நபருக்கும் காயம் ஆறி குணமடைந்து விடும் என்று பெரும்பாலும் உத்தரவாதம் அளிக்க முடியும்.” என்று கூறினார். 

Read Also  பேராசிரியர் டாக்டர் ஆதி ஜோதி பாபுவுக்கு பஞ்ச பூத சிகிச்சைக்கான உலக சாதனை விருது வழங்கப்பட்டது.!!

ராயபுரம் – எம்.வி. நீரிழிவு மருத்துவமனையின், நீரிழிவு பாத அறுவைசிகிச்சை நிபுணரான டாக்டர். ஜி. செந்தில் கூறியதாவது: “நீரிழிவு பாத தொற்றுள்ள பல நபர்களில், பாதத்தில் துடிப்புகள் உணரக்கூடியவையாக இருப்பதில்லை.  PAD பாதிப்பு அவர்களுக்கு இருப்பதையே இது காட்டுகிறது.   அத்தகைய நபர்களுக்கு பெரிய அளவிலான உறுப்புநீக்க சிகிச்சை செய்ய வேண்டிய உயர் இடர்வாய்ப்பு இருக்கிறது.  ஆஞ்சியோபிளாஸ்டி செயல்முறையை மேற்கொள்வதன் மூலம் அத்தகைய நபர்களின் பாதங்களை வெட்டி துண்டிக்காமல், பாதுகாப்பது சாத்தியமே.  திசு / சதை அழுகல் ஏற்பட்டுள்ள கால் விரல்களை வெட்டி நீக்குவது (சிறிய உறுப்பு நீக்கம்) அவர்களுக்குத் தேவைப்படும்.  அவர்களுக்கு இருக்கும் தொற்று தீவிரமாக இல்லையெனில், இதன்மூலம் பெரிய அளவிலான உறுப்பு நீக்கம் செய்யாமல் எங்களால் தடுக்க முடியும்.” 

No.4, West Madha Church Street, Royapuram, Chennai – 600 013.
www.mvdiabetes.com

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *