சந்திரயான் 3  இந்திய விண்வெளி வரலாற்றில் இந்நாள் பொன்னாள் பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் மகிழ்ச்சி!!

சந்திரயான் 3  இந்திய விண்வெளி வரலாற்றில் இந்நாள் பொன்னாள் பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் மகிழ்ச்சி!!

சென்னை 23 ஆகஸ்ட் 2023 ஸ்ரீஹரிஹோட்டாவிலிருந்து ஜூலை 14-ஆம் நாள் வெண்வெளிக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் பல்வேறு கட்ட பயணங்களுக்குப் பிறகு இன்று மாலை நிலவில் தரையிறக்கப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்துள்ள முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

இந்த நாள் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் பொன் நாள்.

இந்த வரலாற்று சாதனையை படைத்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் உள்ளிட்ட விஞ்ஞானிகள் அனைவருக்கும் பாராட்டுகள்.

விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துகள்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *