பாஜகவின் அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு கலைப்பு – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

சென்னை 10 செப்டம்பர் 2022 பாஜகவின் அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு  கலைப்பு  அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பிரிவு மற்றும் அதன் உட்பிரிவுகள் அனைத்தும், மறுசீரமைப்பிற்காக இன்று முதல் கலைக்கப்படுகிறது

தமிழ்நாடு பாஜகவின் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பிரிவு மற்றும் அதன் உட்பிரிவுகள் அனைத்தும் மறுசீரமைப்பு பணிகளுக்காக கலைக்கப்படுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பிரிவு மற்றும் அதன் உட்பிரிவுகள் அனைத்தும், மறுசீரமைப்பிற்காக இன்று முதல் கலைக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதில் பொறுப்பில் இருந்த நிர்வாகிகள் அனைவரும், மறு அறிவிப்பு வரும் வரை மண்டல, மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளுடன் இணைந்து தொடர்ந்து களத்தில் கட்சிப் பணி ஆற்றிட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.

இந்த அறிவிப்பை தமிழ்நாடு பாஜக ஐடி விங் தலைவர் சிடி நிர்மல் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published.