இனி தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்கலாம்.. வந்தாச்சு இவி யாத்ரா ஆப்!
சென்னை 15 டிசம்பர் 2022 இனி தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்கலாம்.. வந்தாச்சு இவி யாத்ரா ஆப்!
இந்தியாவில் இவி சார்ஜிங் ஸ்டேஷன்களை கண்டறிய யாத்ரா எனும் பிரத்தியேக மொபைல் செயலி அறிமுகமாகியுள்ளது.
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
மக்களும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் எலெக்ட்ரிக் வாகனங்களின் பக்கம் திரும்பி உள்ளனர்.
ஆனால் இந்தியாவில் அதிகமாக சார்ஜிங் ஸ்டேஷன்கள் இல்லாத காரணத்தாலும், எந்த எந்த இடங்களில் சார்ஜிங் ஸ்டேஷன்கள் உள்ளது என்பதை சரியாக அடையாளம் காணமுடியாதது.
உள்ளிட்ட சந்தேகங்கள் மற்றும் பயத்தால் மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதில் தயக்கம் காட்டி வருகின்றன.
இந்நிலையில் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக மத்திய அரசு இவி யாத்ரா என்ற செல்போன் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
தேசிய ஆற்றல் சேமிப்பு தினமான நேற்று (டிசம்பர் 14ம் தேதி) இந்த செயலியை இந்திய குடியரசு தலைவர் திரெளபதி முர்மு துவக்கி வைத்தார்.
எனர்ஜி எஃபிசியன்ஸி பியூரோ சார்பில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செயலியை ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஆகிய தளங்களிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் இந்த செயலில் பொது சார்ஜிங் மையங்களை வைத்திருப்பவர்கள் தங்கள் சார்ஜிங் மையங்கள் குறித்த தகவல்களை பதிவு செய்து கொள்ளலாம்.
அதுமட்டுமல்லாமல், சார்ஜிங் மையம் இருக்கும் இடம், மையத்தில் என்ன வகையான சார்ஜர்கள் உள்ளன போன்ற தகவல்களையும், சார்ஜிங் மையத்தில் எந்த நேரம் ஸ்லாட் இருக்கிறது.
சார்ஜ் ஏற்ற எவ்வளவு கட்டணம் ஆகிய தகவல்கள் இந்த ஆப்பில் பதிவேற்றிவிட்டால், பொதுமக்கள் இந்த தகவல்களை அவர்கள் செல்போன் ஆப் மூலம் தெரிந்து கொள்ளவது மட்டுமல்லாமல், அந்த சார்ஜிங் மையத்தில் சார்ஜ் செய்ய விரும்பினால் இதே செயலியில் மக்கள் புக்கிங் செய்துகொள்ளலாம்.
சார்ஜிங் ஸ்டேஷன் வைத்திருபவர்கள் தங்கள் மையங்களில் வழங்கும் பிற சேவைகள் குறித்தும் இந்த ஆப்பில் பதிவு செய்யலாம். இதன் மூலம் சார்ஜிங் செய்ய வருபவர்கள் இந்த சேவைகளை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
மேலும் இந்த செயலியை பயன்படுத்தி, இந்த ஆப்பை பயன்படுத்தி நீண்ட தூர பயணம் செய்பவர்கள் முன்னரே பதிவு செய்து தங்கள் காரை சார்ஜ் செய்து கொள்ளலாம்.