தூத்துக்குடியில் தனியார் கற்றாலை நிறுவன ஊழியர்கள் கொலை வெறி தாக்குதல் தாக்கப்பட்ட முன்னாள் அதிமுக எம்எல்ஏ.!
தூத்துக்குடியில் தனியார் கற்றாலை நிறுவன ஊழியர்கள் கொலை வெறி தாக்குதல் தாக்கப்பட்ட முன்னாள் அதிமுக எம்எல்ஏ.!
சென்னை 03 செப்டம்பர் 2023 தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக சுந்தர்ராஜ் இருந்தவர்.
தற்போது அ.ம.மு.கவின் தலைமை கழக அமைப்பு செயலாளராக இருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று தனியார் காற்றாலை நிறுவன ஊழியர்களால் தாக்குப்பட்டது தொடர்பாக தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியில் உள்ள விவசாய விளைநிலங்களுக்கு செல்லும் நீரோடை பாதைகளை ஆக்கிரமித்துள்ள தனியார் (Semcorp) காற்றாலை நிறுவனத்தின் அடாவடித்தனங்களை கண்டித்து ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்ராஜ் பல்வேறு துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்து பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்த நிலையில் நேற்று தனியார் காற்றாலை நிறுவனத்தினர் பொது பாதைகளை ஆக்ரமித்து சிமெண்ட் சாலை அமைப்பதை தடுக்க சென்ற முன்னாள் எம்எல்ஏ சுந்தர்ராஜ் மீது கொலை வெறி தாக்குதல் நடந்தேறியுள்ளது.
தனியார் காற்றாலை நிறுவன ஊழியர்களால் தாக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ சுந்தர்ராஜ் தற்போது ஓட்டப்பிடாரம் வஉசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினர் கொலை தாக்குதல் நடத்திய தனியார் காற்றாலை நிறுவனத்தினர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனம் காட்டி வருவதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.