கல்வியில் நவீன மாற்றங்களை உட்புகுத்தும் லேர்ன் என் இன்ஸ்பையர் நிறுவனம்!!!
சென்னை 14 அக்டோபர் 2022 கல்வியில் நவீன மாற்றங்களை உட்புகுத்தும் லேர்ன் என் இன்ஸ்பையர் நிறுவனம்!!!
சென்னை, 14 அக்டோபர் 2022: லேர்ன் என் இன்ஸ்பையர் நிறுவனம் என்பது மெட்டாமார்போஸில் இஞ்சினியரிங் அண்ட் ஸ்கில் டெவெலப்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பகுதியாகும், ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள இந்நிறுவனம் கடந்த 2015 இல் கல்வி நிபுணர்கள் மற்றும் தொழில்துறையின் சமூக பங்களிப்பு நிறுவனர்களால் நிறுவப்பட்டது. இது அமெரிக்காவின் ஐலேர்னிங் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது . இது 10 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் வாழ்க்கையை மாற்றும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.
குறுகிய காலத்தில், லேர்ன் என் இன்ஸ்பையர் நிறுவனம் முன்னணி கல்வி உள்ளடக்கம், டிஜிட்டல் தளம், பயிற்சியாளர்கள் வலையமைப்பு, டெல்லியை சேர்ந்த முன்னி இன்டர்நேஷனல் ஸ்கூல் மற்றும் அகமதாபாத்தின் ரிவர்சைடு பள்ளியுடன் கூட்டாண்மை, மற்றும் ஹைதராபாத் மற்றும் ஜெய்ப்பூரில் அதன் மாற்று கல்விக்கான “ஐ கேன் விஷனரி பள்ளி” ஆகியவற்றை இயக்கி வருகிறது.
கடந்த 6 மாதங்களில் அவர்கள் 100க்கும் மேற்பட்ட பள்ளிகளில் செயல்பட்டு வருவதுடன் மேலும் 2000க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை அடையாளம் கண்டுள்ளனர். இந்நிறுவனம் அதன் முதல் மைல்கல் இலக்காக தற்போது கைவசம் உள்ள 1000 பள்ளிகளை தொலைநோக்கு பள்ளிகளாக மேம்படுதும் நோக்கத்தை கொண்டுள்ளது. பிஜிட்டல் (உடல் மாற்ற திட்டங்கள் மற்றும் உலகளாவிய டிஜிட்டல் உள்ளடக்கத்தின் ஆற்றல்) மாதிரியுடன் இந்தியாவின் முதல் ஹோலிஸ்டிக் தொழில்நுட்ப கல்வி நிறுவனமாக இது நிலைநிறுத்தப்படவுள்ளது.
ஐ கேன் விஷனரி பள்ளியின் 4 முக்கிய சிறப்பம்சங்கள் என்னவென்றால்,
அ) குழந்தையின் உடல், மன, சமூக, உணர்ச்சி, நினைவாற்றலை வளர்த்தல் மூலம் அவர்கள் ஆசிரியர்களைப் பயிற்றுவித்து ஆசிரியர்களை தொலைநோக்கு பார்வையுடைவர்களாக மாற்றுதல்.
ஆ) முழுமையான கற்றல், கல்வியில் சிறந்து விளங்குதல், தொழில்முனைவு, முக்கிய மதிப்புகள், 21 ஆம் நூற்றாண்டின் சிந்தனைத் திறன், தொழில்நுட்பத் தலைமையை வளர்த்தெடுத்தல்.
இ) 20 நாடுகளில் 3000க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களை இணைக்கும் உலகளாவிய கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் மையத்தை அமைத்தல்,
ஈ) பள்ளி நிறுவனர்கள், முதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பணியாளர்கள், ஆயாக்கள், ஓட்டுனர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான கையொப்ப நிகழ்ச்சிகள் மூலம் குழந்தை மைய சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குதல்.
இதுகுறித்து லேர்ன் என் இன்ஸ்பையர் நிறுவனர் ஜோதி கே ஹட்டி கூறுகையில், லேர்ன் என் இன்ஸ்பையர் தளத்தின் அடிப்படையில், மெட்டாமார்போஸில் இஞ்சினியரிங் அண்ட் ஸ்கில் டெவெலப்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் நாடு முழுவதும் 1000 தொலைநோக்குப் பள்ளிகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது, இது தற்போதுள்ள பள்ளிகளுடன் கூட்டுசேர்வதன் மூலம் அவர்களின் மாணவர்களுக்கு இன்னும் முழுமையான கல்வியை வழங்கவும், எதிர்காலத் தலைவர்களாக அவர்களை மாற்றுவதற்கும் ஒரு தொடக்கத்தைத் தரும். ஆத்மநிர்பர் பாரதத்தின் வளர்ச்சியில் இது ஒரு முக்கிய படியாக இருக்கும்” என்று கூறினார்.
தங்களது கூட்டாண்மை மூலம் உலகம் முழுவதும் பரவியுள்ள இந்நிறுவனம், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய தேசிய கல்வி கொள்கை மூலம், இந்தியாவில் இருந்து சிறந்த கல்வியை மற்ற நாடுகளுக்கும், மற்ற நாடுகளின் சிறந்த கல்வியை இந்தியாவிற்கும் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. உலகம் எனது குடும்பம், எனது வாழ்க்கையை மாற்றுவதன் மூலம் இந்தியாவின் அறிவை உலகுக்கு பகிர்ந்து கொள்கிறேன் என்னும் வாசுதேவ குடும்பகம் சொல்லுக்கேற்ப இந்தியாவை உலகத்திற்கான அறிவு மையமாகவும், மனித வள மையமாகவும் மாற்றும் எண்ணத்துடன் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.