எம்ஜிஎம் ஹெல்த்கேர், மாற்று அறுவை சிகிச்சைக்காக உறுப்புகளை வேகமாக கொண்டு செல்ல புரட்சிகர தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்துகிறார்கள்! 

சென்னை 03 செப்டம்பர் 2022 எம்ஜிஎம் ஹெல்த்கேர், மாற்று அறுவை சிகிச்சைக்காக உறுப்புகளை வேகமாக கொண்டு செல்ல புரட்சிகர தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்துகிறார்கள்! 

முப்பது வருடங்களாய் இதயப் பாதுகாப்பு: இந்தியாவில் 500க்கும் மேற்பட்ட இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ததற்காக மத்திய அமைச்சர் டாக்டர்  கே.ஆர். பாலகிருஷ்ணன், எம்ஜிஎம் ஹெல்த்கேர் அவர்களை கௌரவிக்கிறார்

எம்ஜிஎம் ஹெல்த்கேர், மாற்று அறுவை சிகிச்சைக்காக உறுப்புகளை வேகமாக கொண்டு செல்ல புரட்சிகர தொழில் நுட்பத்தை முன்வைக்கிறது.  

03 செப்டம்பர், சென்னை: இந்தியாவில் 500 க்கும் மேற்பட்ட இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து இந்தியாவிலேயே பிரம்மாண்டமான பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான இதய மாற்றுத் திட்டத்தை நடத்தி வருவதற்காக டாக்டர் கே.ஆர். பாலகிருஷ்ணன், தலைவர்  இயக்குனர்இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் இயந்திர சுழற்சி ஆதரவு நிறுவனம், எம்ஜிஎம் ஹெல்த்கேர் மற்றும் அவரது மருத்துவகுழுவை , திரு. மா. சுப்பிரமணியன், மாண்புமிகு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு அவர்களின் முன்னிலையில் திரு. நிதின் ஜெய்ராம் கட்கரி, மாண்புமிகு இந்தியச் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் அவர்களால் பாராட்டப்பட்டனர்.

தற்செயலாக, இந்த 500 க்கும் மேற்பட்ட இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை, முழு ஆசியா பசிபிக்கிலும், ஒருவேளை உலகிலேயே ஒரு குழுவால் நிகழ்த்தப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கையாக கூட இது இருக்கலாம்.

ஜார்கண்ட் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. ஜகர்நாத் மஹ்தோ மற்றும் மோகன் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுனில் ஷ்ராஃப் மற்றும் சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேர் தலைவர் எம்.கே.ராஜகோபாலன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், திரு. எம்ஜிஎம் ஹெல்த்கேர் இணைந்து உருவாக்கிய இந்தியாவின் முதல்முன்மாதிரிட்ரோன் தொழில்நுட்பத்தையும் நிதின் கட்கரி துவங்கிவைத்தார்.

இது மாற்று உறுப்புகளை கொண்டுசெல்வதில் புரட்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. திரு. மா. சுப்ரமணியன் முன்மாதிரியைப் பாராட்டினார், மேலும் இது மேலும் உயிர்களைக் காப்பாற்ற வழி வகுக்கும் என்றும், விரைவில் செயல்பட அனைத்து ஆதரவையும் உறுதி செய்வதாகவும் கூறினார்.

Read Also  அப்போலோ மருத்துவ மனையில் மார்பில் மீண்டும் வளரக்கூடிய மிகவும் அரிதான பெரிய கட்டியை சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றி சாதனை!

மேலும் அவர், “சென்னை மற்றும் எம்ஜிஎம் ஹெல்த்கேர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தில் முன்னணியில் உள்ளது மற்றும் இன்று உலகின் மிகச் சிறந்த நிலைக்கு இணையாக உள்ளதுஎன்று கூறினார். 

டாக்டர் கே.ஆர். பாலகிருஷ்ணன் கூறுகையில், “இதுவரை, நாங்கள் 514 மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக முடித்துள்ளோம்.

எங்கள் குழு, அரசு அமைப்புகள் மற்றும் போக்குவரத்துக் குழுக்களின் மகத்தான ஆதரவு மற்றும் நிபுணத்துவத்தால் இது சாத்தியமானது.

இன்று காட்சிப்படுத்தப்பட்ட முன்மாதிரி, மாற்றுத் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கும் அதிக உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் அதிக வாய்ப்புகளை நமக்கு வழங்குகிறது.

எம்ஜிஎம் ஹெல்த்கேரின் அடிப்படை வசதிகள் மற்றும் ஆதரவு நாட்டிலேயே மிக உயர்ந்ததாகும். இது  350+ எக்மோ நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு எங்களுக்கு உதவியது. இதுமட்டுமின்றி, 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் மாற்று அறுவை சிகிச்சைகள் மற்றும் 4600க்கும் மேற்பட்ட இடையீடு வழக்குகள், ஐஸ்வர்யா டிரஸ்ட் – ‘கேரிங் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்உடன் இணைந்து இலவசமாக, தமிழ்நாடு முதலமைச்சரின் திட்டத்தின் கீழ் 220 க்கும் மேற்பட்ட செயல்முறைகளை முடித்துள்ளோம்.

முக்கிய உண்மைகள்

தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு & ஆப்பிரிக்காவின் 3-வயதுரஷ்ய சிறுவனுக்கு முதல் பைவென்ட்ரிகுலர் பெர்லின் இதயம் பொருத்துதல்

கோவிட் பாசிட்டிவ் நோயாளிக்கு ஆசியாவின் முதல் இருதரப்பு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை

இந்தியாவின் வெற்றிகரமான எச்விஏடி

இந்தியாவின் வெற்றிகரமான எல்விஏடி

ஆசியா பசிபிக்கின் குழந்தையில் முதல் வெற்றிகரமான குழந்தைகளுக்கான பெல்லர் பம்ப் 

எம்ஜிஎம் ஹெல்த்கேர் இந்தியாவின் மிகப்பெரிய மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தை நடத்து வருகிறது

30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன், 50+ நாடுகளைச் சேர்ந்த நோயாளிகளுக்கு இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில் ஊரடங்கு மற்றும் தொற்றுநோய்கள் இருந்தபோதிலும் 200 க்கும் மேற்பட்ட இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். அவர் சுகாதார நடைமுறைகள் மற்றும் அறுவை சிகிச்சையில் மருத்துவ நிபுணத்துவம் ஆகியவற்றில் சான்று அடிப்படையிலான அணுகுமுறையில் நிபுணத்துவம் பெற்றுள்ளார். மேலும், இறுதிநிலை இதய செயலிழப்பு மேலாண்மை (இதய மாற்று மற்றும் VAD உள்வைப்பு), குழந்தை இருதய அறுவை சிகிச்சை, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று சிகிச்சை ஆகியவை அவரது நிபுணத்துவப் பகுதிகளாகும். அவர் தனது பணிக்காக பல விருதுகளைப் பெற்றுள்ளார், இது சில உயர்தர மருத்துவ இதழ்களில் வெளியிடப்பட்டுள்ளது.

டாக்டர். சுரேஷ் ராவ், இணை இயக்குநர், இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை & இயந்திர சுழற்சி ஆதரவு, எம்ஜிஎம் ஹெல்த்கேர் மேலும் பேசுகையில் , “இந்தியாவின் மிகப்பெரிய இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தை இயக்குவது என்பது இயந்திர மனித ரத்த ஓட்ட அமைப்பு மற்றும் அந்த துறையில் எங்கள் மருத்துவக்குழு மற்றும் டாக்டர். கே.ஆர். பாலகிருஷ்ணன் அவர்களுக்கு இருக்கும் நிபுணத்துவம் மற்றும் அர்ப்பணிபினால் தான் சாத்தியமானது”  எனக் கூறினார்.

டாக்டர். ரவிக்குமார் ஆர், மூத்த ஆலோசகர் & அசோசியேட் கிளினிக்கல் லீட் -இருதயவியல் மற்றும் இதய செயலிழப்பு திட்டம், எம்ஜிஎம் ஹெல்த்கேர் பேசுகையில்,”இதய செயலிழப்பு என்பது இந்தியாவில் பெரிதும் கவனிக்கப்படாத பிரச்சனையாகும். வழக்கமான சிகிச்சைக்கு பதிலளிக்காத இறுதி நிலை இதய செயலிழப்பு நோயாளிகளின் வாழ்க்கைத் தரம் மற்றும் நீண்ட ஆயுளை, இதய மாற்று அறுவை சிகிச்சை மற்றும் இடது வென்ட்ரிகுலர் அசிஸ்ட் டிவைஸ் (எல்விஏடி) போன்ற மேம்பட்ட நடைமுறைகள் மூலம் மேம்படுத்தலாம்.” எனக் கூறினார்.

எம்ஜிஎம் ஹெல்த்கேர் இயக்குநர் டாக்டர் பிரசாந்த் ராஜகோபாலன் பேசுகையில், “இதுபோன்ற ஒரு மைல்கல் மாற்று அறுவை சிகிச்சை குழுவின் முயற்சிகளை திரும்பிப் பார்க்கும் வாய்ப்பை அளிக்கிறது. இன்று, பல்வேறு நாடுகளில் இருந்து நோயாளிகள் அதிக அளவில் சிகிச்சைக்காக இந்தியா வருகின்றனர். இந்த குறிப்பிடத்தக்க சாதனையால், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் சிறந்த மருத்துவ பலன்களுக்கான சிறந்த மருத்துவ திறமைகளில் முதலீடு செய்துஇந்தியாவை உலகளாவிய மருத்துவ மையமாக மாற்ற நாங்கள் மேலும் உறுதியுடன் இருக்கிறோம்.” என்று கூறினார்.

இந்த தருணத்தில் எம்ஜிஎம் ஹெல்த்கேர் , உறுப்பு கொண்டு செல்லும் திட்டத்தைச் சம்பந்தப்பட்டவர்களான விமான நிலைய அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், ஏர் ஆம்புலன்ஸ் குழுவினர், நிதி திரட்டும் ஏஜென்சிகள், மருத்துவமனை உறுப்பு மாற்று அதிகாரிகள், அரசு உரிமம் வழங்கும் அதிகாரிகள், நோட்டோ தலைவர் மற்றும் மருத்துவ உதவியாளர்களையும் கௌரவித்தது.

எம்ஜிஎம் ஹெல்த்கேர் பற்றி:

பரோபகாரத்தின் தேவையினால் உருவான எம்ஜிஎம் ஹெல்த்கேர், நோயாளியின் அனுபவங்களை மேம்படுத்துவதற்கும், நிபுணத்துவம், ஆர்வம் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் மருத்துவ பலன்களை மேம்படுத்துவதற்கும் தன்னை அர்ப்பணிக்கத்துள்ளது. இந்த அர்ப்பணிப்பினால் நெல்சன் மாணிக்கம் சாலையில் 400 படுக்கைகள், 50 வெளிநோயாளிகள் ஆலோசனை அறைகள், 100க்கும் மேற்பட்ட தீவிர சிகிச்சைப் படுக்கைகள், 250+ மருத்துவர்கள், 30+ மருத்துவப் பிரிவுகள், 12 அதிநவீன அறுவை சிகிச்சை அறைகள் மற்றும் 24×7 அனைத்தையும் உள்ளடக்கிய அவசர சிகிச்சை மையம் உடைய அதி நவீன மருத்துவமனை இயங்கி வருகிறது. எம்ஜிஎம் ஹெல்த்கேர் தற்போது ஆசியாவின் மிக உயர்ந்த தரமதிப்பீடு பெற்ற யுஎஸ்ஜிபிசி லீட்  பிளாட்டினம்சான்றளிக்கப்பட்ட பசுமை மருத்துவமனையாகும்.

கடந்த ஆண்டில், எம்ஜிஎம் ஹெல்த்கேரில் உள்ள மருத்துவ நிபுணர்கள் குழு நம்பிக்கை மற்றும் மருத்துவ சிறப்பை நிலைநாட்டும் நோக்கத்தில் பல புதுமையான மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சைகளை செய்துள்ளது. எம்ஜிஎம் ஹெல்த்கேர் நவீன தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது நோயாளி மையத்தன்மை மற்றும் மருத்துவ சிறப்பை உள்நாட்டு மற்றும் சர்வதேச நோயாளிகளின் செலுத்த தயாராக உள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *