முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு இன்று நினைவு நாள்!
சென்னை 07 ஆகஸ்ட் 2022 முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு இன்று நினைவு நாள்!
2018 ஆகஸ்ட் 7ஆம் தேதி காவிரி மருத்துவமனையில் காலமானார்.
மறைந்த திராவிட முன்னேற்ற கழகம் தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் நான்காவது ஆண்டு நினைவு நாள் இன்று அணுசரிக்கப்படுகிறது.
திருவாரூரில் கருணாநிதி இல்லம் மலர்களால் இதய வடிவில் அலங்கரிப்பு செய்யப்பட்டுள்ளது.
கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில்… வங்க கடல் போன்று வடிவமைப்பு.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பாக இன்று அமைதி பேரணி நடத்தப்பட்டுவருகிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணி நடைபெற்றது ,
பேரணி முடிவில் கலைஞர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், எம் எல் ஏக்கள் திமுக எம்பிக்கள் ஆயிரக்கணக்கான கழகத் தொண்டர்கள் அனைவரும் அமைதி பேரணியில் கலந்து கொண்டனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெறுகிறது.