மார்ட்டின் அறக்கட்டளை சார்பில் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் செயற்கைக் கோள் ஏவும் திட்டம் -2023 தொடக்கம்.!!

சென்னை 15 பிப்ரவரி 2023  மார்ட்டின் அறக்கட்டளை சார்பில் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் செயற்கைக் கோள் ஏவும் திட்டம் -2023 தொடக்கம்.!!

ஏபிஜே அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை மற்றும் ஸ்பேஸ் ஜோன் இந்தியா அமைப்புடன் இணைந்து முயற்சி.

சென்னை, 15, பிப்ரவரி 2023: மார்ட்டின் அறக்கட்டளை, டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளை மற்றும் ஸ்பேஸ் ஜோன் இந்தியாவுடன் இணைந்து, டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் செயற்கைகோள்களை ஏவும் திட்டம் 2023 செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த முன்மாதிரி திட்டத்தில் இந்தியா முழுவதும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் 5,000 மாணவர்கள் பங்கேற்கின்றனர். இவர்கள் சுமார் 150 சிறிய ரக (1 கிலோ எடைக்கும் குறைவான) செயற்கைகோள்களை வடிவமைத்து உருவாக்க உள்ளனர். பின்னர் இந்த செயற்கைக்கோள்கள் சவுண்ட் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளது.

இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் மற்றும் கணிதவியலை கற்றுக் கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது.

இத்திட்டத்திற்கான 85 சதவீத நிதி பங்களிப்பை மார்ட்டின் அறக்கட்டளை வழங்குகிறது. டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் செயற்கைகோள் ஏவும் திட்டம் -2023, செங்கல்பட்டு மாவட்டம் பட்டிபுலம் கிராமத்தில் வரும் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி வைக்கப்பட உள்ளது.

இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு செயற்கைக்கோள் தொழில்நுட்பம் குறித்து இணைய வழியில் வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், திட்டம் குறித்து விரிவாக ஆராயும் வகையில் நேரடி அமர்வுகளும் நடத்தப்பட்டன. செயற்கைக்கோள் தொழில்நுட்பம் குறித்த போதிய விழிப்புணர்வு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Read Also  தமிழக அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான உயர்கல்வி செலவை அரசு ஏற்கும் அரசாணை வெளியீடு!

இந்த முன்மாதிரி திட்டம் குறித்து,மார்ட்டின் குழுமங்களின் தலைமை இயக்க அதிகாரி எம்.ஜார்ஜ் மார்ஷல் கூறுகையில், இத்திட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளை சேர்ந்த 2,000 மாணவர்களும் ஒரு அங்கமாக இருப்பது மிகுந்த மனநிறைவை அளிக்கிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல் குறித்த பயிற்சி பெற உதவிகரமாக இருப்பதும், அவர்கள் தங்களுக்கான வேலைவாய்ப்பை அறிந்து கொள்ளும் தளமாக விளங்குவதில் மகிழ்ச்சி தரும் அனுபவமாக உள்ளது என்றார்.

சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி வி.ரங்கநாதன் பேசுகையில், சரியான நேரத்தில் மாணவர்களை வைத்து செயற்கைக்கோள் ஏவும் திட்டத்தை மேற்கொண்டிருக்கும் மார்ட்டின் அறக்கட்டளை, டாக்டர் .பி.ஜெ.அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளை மற்றும் ஸ்பேஸ் ஜோன் இந்தியா அமைப்பினரின் முயற்சியை பாராட்டுதலுக்கு உரியது. மேலும் பல்வேறு வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு காலத்தின் தேவையாக உள்ளது. பெரும்பாலான நேரங்களில், தொழில் வாய்ப்புகளை தாண்டி முயற்சித்தும், சோதித்தும் பார்ப்பதில்லை. டாக்டர் .பி.ஜெ.அப்துல்கலாம் செயற்கைக்கோள் ஏவும் திட்டத்தில்-2023 தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளுக்கு கதவை திறந்துவிட்டுள்ளது. அதேவேளையில் புதிய முன்முயற்சி மூலம் மாணவர்கள் போதிய அறிவுத்திறனை பெற்றிருப்பதைத் தவிர, தங்கள் வாழ்நாளில் ஒரு முறை மறக்க முடியாத சிறந்த அனுபவத்தைப் பெறுகின்றனர். இத்திட்டம் வருடாந்திர நிகழ்வாக மாற வேண்டும். அதேபோல இந்த நிகழ்வை பெரியதாகவும் அதிக நன்மை பயக்கும் வகையிலும் அதிகமானவர்கள் பங்களிக்கும் வகையிலும் அமைய வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் இந்தியா விண்வெளி திட்டங்கள் வேகமாக வளரவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும், எதிர்காலத்தில் விண்வெளி திட்டத்தில் இந்தியா முன்னணி வகிக்க உதவும் என்றார்.

Read Also  ஹிந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அன்ட் சயின்ஸ் (HITS), HITS  ஆன்லைன் பொறியியல் நுழைவுத் தேர்வு & HITSEEE 2022 & HITSCAT 2022 க்கான தேதிகளை அறிவித்தது.

ஸ்பேஸ் ஜோன் இந்தியா நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியுமான Dr.ஆனந்த் மேகலிங்கம் கூறுகையில், எங்கள் குழுவைச் சேர்ந்த வல்லுநர்கள் செயற்கைக்கோள் தொழில்நுட்பம், ராக்கெட் தொழில்நுட்பம், ட்ரோன் தொழில்நுட்பம் மற்றும் இதர தொடர்புடைய துறைகளுடன் இது சாத்தியமாகி உள்ளது. ஆரோக்கியமான விண்வெளி தொழில்நுட்பத்தில் பங்களித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

மறைந்த குடியரசு தலைவர் .பி.ஜெ.அப்துல்கலாமின் பேரன்களும், ராமேஸ்வரத்தில் உள்ள கலாம் வீட்டின் டாக்டர் .பி.ஜெ.அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளையின் இணை நிறுவனர்களுமான .பி.ஜெ.எம்.ஜெ. ஷேக் தாவூத் மற்றும் .பி.ஜெ.எம்.பி. ஷேக் சலீம் ஆகியோர் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தியதற்கு தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *