நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை கட்டுபடுத்த தவறினால் பின்பு மிகப் பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.    

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை கட்டுபடுத்த தவறினால் பின்பு மிகப் பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.    

சூப்பர் ஸ்டார் என்றால் அது நடிகர் ரஜினிகாந்த் மட்டும்தான் என பல கோடி ரசிகர்கள் ஒரே நேரத்தில் கோஷமிடுவார்கள்.

அப்படிப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் கிட்டத்தட்ட பல வருடங்களாக சூப்பர் ஸ்டாராகவே வாழ்ந்து வரும் நிலையில், நாளை தனது 72வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார்.

வருடம் தோறும் டிசம்பர் 12ஆம் தேதி என்றாலே உற்சாகத்தில் துள்ளி குதிக்கும் ரசிகர்கள் கூட்டத்தால் பல வகையான வாழ்த்து மடல்கள் குவியும் விதவிதமான சுவரொட்டிகள் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

அதிலும், சர்ச்சையில் இருந்து தப்பிக்கத் துடிக்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மேலும் சர்ச்சையில் தள்ளி விடும் வகையிலேயே இந்த மாதிரியான சுவரொட்டிகள்
ஒட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மதுரையில், திருவள்ளுவரின் புகைப்படத்தை நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முகத்தை மார்ஃப் செய்து காவி உடை மற்றும் ருத்ராட்ச மாலை அணிந்து சுவரொட்டிகள் மதுரை சேர்ந்த ரசிகர்கள் அடித்து ஒட்டியுள்ளனர்.

இதில் தலைப்பு வேறு, “வாழும் வள்ளுவரே!” என அடித்துள்ளனர்.

இந்த மாதிரியான சுவரொட்டிகள் சமூக வலைதளங்களில் தற்போது பரவி இது என்ன டா? எங்க தலைவருக்கு வந்த சோதனை என்றெல்லாம் கமெண்ட் செய்து இணையத்தை ரசிகர்கள் தெரிக்கவிட்டு வருகின்றனர்.

இது ரஜினிகாந்த்க்கு வந்த வேதனையா? திருவள்ளுவர் அய்யாவுக்கு வந்த சோதனையா? என்று புரியவில்லை.

Read Also  டாணாக்காரன் திரைப்படம். விரைவில் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது.

ரசிகர்கள் தனது மனதில் மட்டும் இது போன்ற சினிமாகாரர்களை வைத்து கொண்டால் சிறப்பாக இருக்கும், நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இது போன்ற செயலை ஆரம்பத்திலேயே தனது ரசிகர்களை கட்டுபடுத்த தவறினால் பின்பு மிகப் பெரிய விளைவுகளை கடுமையாக சந்திக்க நேரிடும்.

என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *