சென்னையில் ரெபெக்ஸ் குழுமம் பசுமை இயக்க வணிகத்தைத் தொடங்கியது!!
சென்னையில் ரெபெக்ஸ் குழுமம் பசுமை இயக்க வணிகத்தைத் தொடங்கியது!!
சென்னை 25 செப்டம்பர் 2023 சென்னை தி.நகரில் புதிய அலுவலகத்துடன் 21 ஆண்டு கால ரெபெக்ஸ் குழுமம் விரிவாக்கம்~~
சென்னை, செப்டம்பர் 25, 2023: இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் ஒன்றாக ரெபெக்ஸ் குழுமம், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக குளிர்பதன எரிவாயு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சாம்பல் மற்றும் நிலக்கரி கையாளுதல், மருத்துவத் தொழில்நுட்பங்கள், மருந்துகள், விமான நிலையங்கள் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றில் பன்முகத்தன்மை கொண்ட நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது.
ரெஃபெக்ஸ் குழுமம் தனது பசுமை இயக்க நிறுவனத்தை சென்னையில் தனது இயக்கத்தைத் தொடங்கி உள்ளது. சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் தலைமையில் தொடங்கியது. இந்த வர்த்தகப் பிரிவு மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும்.
பெங்களூரில் இருந்து 2023 மார்ச் மாதம் அனைத்து மின்சார வாகனங்களுக்கான (எலக்ட்ரிக் வாகனங்கள்) முயற்சியாக செயல்பட தொடங்கியது. பெருநிறுவனங்கள் மற்றும் வர்த்தகத் தேவைகளின் முழுவதையும் பூர்த்தி செய்யும்.
2023 மார்ச் மாதம் பெங்களூரிலிருந்து அனைத்து மின்சார வாகனங்களுக்கான முயற்சியாக செயல்படத் தொடங்கியது. இது பெருநிறுவன மற்றும் வணிக பயணத் தேவைகளின் முழு அளவையும் பூர்த்தி செய்யும். இந்த சேவைகள் ரெஃபெக்ஸ் குழுமத்தின் சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகம் (ESG) கால் தடம் பதிக்க உதவுவதுடன் மட்டுமல்லாமல், பெரு நிறுவனங்களுக்கு அதன் கார்பன்டை ஆக்சைடு வெளியேற்றதைக் குறைக்கவும், கார்பன் அடித்தடத்தையும் குறைக்கவும் உதவும்.
சென்னை தி.நகரில் தற்போதுள்ள அலுவலக வளாகத்துடன் புதிய அலுவலகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ரெபெக்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் அனில் ஜெயின் பேசுகையில், ரெபெக்ஸ் பசுமை இயக்கம் குழுமம் மார்ச் மாதத்தில் தனது செயல்பாடுகளை தொடங்கியது முதல் கடுமையாக உழைத்து வரும் வேளையில், தற்போது சென்னையில் தொடங்கி உள்ள சேவை பெருநிறுவனங்களின் தேவையை பூர்த்தி செய்யும். நகரத்தின் மையப்பகுதியில் உள்ள புதிய அலுவலகம் பற்றியும் அறிவிப்பது சரியான தருணமாகும். சுமார் 15,300 சதுர அடி அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்ற முடியும் என்றார்.
ரெஃபெக்ஸ் குழுமத்தின் மூன்று மாடி வளாகம் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் முழுவதும் நவீன முறையில் உள்புற வடிவைப்பு, ஊழியர்களுக்கு உகந்த வேலை சூழல் அமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் மின்சாரம் மற்றும் தண்ணீர் சேமிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகம் (ESG) கால் தடம் அதிகரிப்பதை நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்துள்ளது. இத்துடன் மின்சார வாகனங்கள் சார்ஜ் செய்யும் இடங்கள், வசதிமிக்க உணவகம், பன்முக மாநாட்டு அறைகள், ஓய்வறைகள், உடற்பயிற்சி அரங்குகள், பொழுதுபோக்கு அறைகள் போன்ற அம்சங்கள் உள்ளன. ரெபெக்ஸ் குழுமத்தின் கீழ் உள்ள இளம் நிறுவனங்களில் ரெபெக்ஸ் கிரீன் மொபிலிட்டி லிமிடெட் ஒன்றாகும். ரெபெக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான நான்கு சக்கர மின்சார வாகனங்கள் மற்றும் தொழில்நுட்ப தளத்தை வழங்குவதன் மூலம் பெருநிறுவனங்கள் மற்றும் பயணிகள் இயக்க தளத்தைப் பூர்த்தி செய்யும்.