சென்னை முத்தையால் பேட்டையில் உள்ள கே.இராமயா செட்டி ஏ.ஆர்.சி மகளிர் மேல்நிலைப் பள்ளியின் 75′ வது ஆண்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது!

சென்னை 18 பிப்ரவரி 2023 சென்னை முத்தையால் பேட்டையில் உள்ள கே.இராமயா செட்டி ஏ.ஆர்.சி மகளிர் மேல்நிலைப் பள்ளியின் 75′ வது ஆண்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது!

சென்னை முத்தையால் பேட்டையில் அமைந்துள்ள கே.இராமயா செட்டி ஏ.ஆர்.சி மகளிர் மேல்நிலைப் பள்ளியின்
75′ வது ஆண்டு விழா, பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது!

நீதிபதி ஆர்.எம்.டி. டிக்கா ராமன் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் புலவர் ஆர்.ராமலிங்ஙம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்!

பள்ளிக் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. பரிசுகள் வழங்கப்பட்டன!

பள்ளி நிர்வாக குழு தலைவர் டாக்டர் வி.பாலு வரவேற்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து பள்ளி வரலாற்றினை பள்ளி செயலாளர் டாக்டர் எஸ்.ஹேமலதா எடுத்துரைத்தார். பின்பு பள்ளியின் ஆண்டு அறிக்கையை தலைமை ஆசிரியை ஆர்.பரமேஸ்வரி வாசித்தார்.

விழா தலைவர் நீதியரசர் ஆர்.எம்.டி. டிக்கா ராமன், சென்னை உயர் நீதிமன்ற விழா மலரினை வெளியிட்டு, மாணவர்களுக்கு அறிதலும் புரிதலும் அவசியம் என்றார்! அவரிடமிருந்து விழா மலரினை பெற்றுக்கொண்ட நகைச்சுவை நாவலர் புலவர் எம்.ராமலிங்கம், மாணவர்களுக்கு நம்பிக்கையினை ஊட்டி பேசினார்.

பள்ளி குழு உறுப்பினர் டாக்டர் பி.மகாலட்சுமி மாணவர்களுக்கு கல்வியின் அவசியத்தை எடுத்துரைத்தார். துணைத் தலைவர் எஸ்.உஷா உரையாற்றினார்! கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து, உதவி தலைமை ஆசிரியை கனக ஜோதி நன்றியுரை ஆற்றினார்!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *