தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் த.மா.கா சார்பில் ஆர்ப்பாட்டம்!
சென்னை 11 ஏப்ரல் 2022 தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் த.மா.கா சார்பில் ஆர்ப்பாட்டம்!
இன்று 11.04.2022 காலை 11 மணி அளவில் த.மா.கா தலைவர் திரு. ஜி.கே. வாசன் அவர்கள், தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், த.மா.கா சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
குறிப்பாக தமிழக அரசின் சொத்து வரி உயர்வால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள், வாடகைக்கு குடியிருப்போர் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதை தமிழக அரசுக்கு எடுத்துரைத்து, சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட தலைவர்கள், மாநில மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டு தமிழக அரசின் சொத்து வரி உயர்வுக்கு எதிராக குரல் கொடுத்தார்கள்.