தமிழக கலை பண் பாட்டுத் துறை மற்றும் சுற்றுலாத்துறை வழங்கும், நாட்டுப்புற கலைஞர்களின் மாபெரும், நாட்டுப்புற இசைவிழா!
சென்னை 19 மார்ச் 2022 தமிழக கலை பண் பாட்டுத் துறை மற்றும் சுற்றுலாத்துறை வழங்கும், நாட்டுப்புற கலைஞர்களின் மாபெரும், நாட்டுப்புற இசைவிழா!
காணக்கிடைக்காத அருங்கலைகள் அரங்கேறும், “நம்ம ஊரு திருவிழா” நிகழ்ச்சிக்கு, உங்கள் அனைவரையும் வருக! வருக என வரவேற்கின்றோம்!
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, நானூறு நாட்டார் கலைஞர்கள், முப்பதுக்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைகளை, நிகழ்த்திக்காட்டும் அரிய நிகழ்வு.
நம் சிங்கார சென்னையின் தீவுத்திடலில், அரங்கேற இருக்கும், இந்த வரலாறு காணாத நிகழ்ச்சியைக் கண்டு மகிழ, மார்ச் 21 -ஆம் தேதி, மாலை 6 மணிக்கு, அனைவரையும், வருக, வருக, என்று வரவேற்கின்றோம்