தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின்பாலி நடிப்பில் படப்பிடிப்பு நிறைவடைந்தது !

சென்னை 13 ஏப்ரல் 2022 தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின்பாலி நடிப்பில் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

‘தங்க மீன்கள்’, ‘பேரன்பு’ உள்ளிட்ட பல உணர்வுப் பூர்வமான படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ராம்.

பிரேமம் படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் ஒரு தனி இடம் பிடித்தவர் நடிகர் நிவின்பாலி.

“மாநாடு” படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இவர்கள் இருவரது கூட்டணியில் தனது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில், புரொடக்சன் நம்பர் -7 ஆக புதிய படம் ஒன்றை தயாரித்து வருகிறார்.

இந்தப் படத்தில் கதாநாயகியாக அஞ்சலி நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

கலை இயக்கத்தை உமேஷ் ஜே குமார் கவனிக்கிறார்..

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே தனுஷ்கோடியில் துவங்கி அதன்பிறகு கேரளாவில் வண்டிப்பெரியார், வாகமன் ஆகிய இடங்களிலும் நடைபெற்றது.

இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களாக சென்னையில் நடைபெற்று வந்தது.

சென்னையில் அருகில் கும்மிடிப்பூண்டியில் உள்ள ஏஆர்ஆர் ஃபிலிம் சிட்டியில் கலை இயக்குநர் உமேஷ் ஜே.குமார் கைவண்ணத்தில் தத்ரூபமாக மிகப்பெரிய ரயில் செட் ஒன்று வடிவமைக்கப்பட்டு, அதில் நிவின்பாலி, சூரி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன.

இந்த படப்பிடிப்பு தளத்திற்கு திடீரென ஒருநாள் விசிட் அடித்த இயக்குநர் மிஸ்கினே, இந்த செட்டை பார்த்து வியந்துபோய் உமேஷின்.கலைநயத்தை பாராட்டி சென்றார்.

Read Also  சபாஷ் மிது படத்தின் முதல் டீஸர் மூலம் கிரிக்கெட் விளையாட்டின் விதியினுடைய சார்புகளை உடைத்தெறிந்துள்ளது.

ஏஆர்ஆர் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இந்தப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவுற்றுள்ளது,

விரைவில் போஸ்ட் புரொடக்சன் பணிகள் துவங்கப்பட் உள்ளன.

தொழில்நுட்பக் கலைஞர்கள் விபரம்.

தயாரிப்பு ; வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் – சுரேஷ் காமாட்சி

இயக்கம் ; ராம்

இசை ; யுவன் சங்கர் ராஜா

ஒளிப்பதிவு ; ஏகாம்பரம்

கலை ; உமேஷ் ஜே குமார்

மக்கள் தொடர்பு ; A. ஜான்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *