WAKO INDIA தேசிய கிக் பாக்ஸிங் என்ற குத்துச்சண்டைப் பயிற்சி முகாம் – 2022, ஏப்ரல் 8 முதல் 17 வரை சென்னை, படூரில் உள்ள இந்துஸ்தான் பல்கலைக் கழகம் வளாகத்தில் நடைபெற்றது.
சென்னை 16 ஏப்ரல் 2022 WAKO INDIA தேசிய கிக் பாக்ஸிங் என்ற குத்துச்சண்டைப் பயிற்சி முகாம் – 2022, ஏப்ரல் 8 முதல் 17 வரை சென்னை, படூரில் உள்ள இந்துஸ்தான் பல்கலைக் கழகம் வளாகத்தில் நடைபெற்றது.
WAKO INDIA தேசிய கிக் பாக்ஸிங் என்ற குத்துச்சண்டைப் பயிற்சி முகாம் – 2022, ஏப்ரல் 8 முதல் 17 வரை சென்னை, படூரில் உள்ள இந்துஸ்தான் பல்கலைக்கழகமும் இநதுஸ்தான் கலை அறிவியல் கல்லூரியும் இனைந்து பயிற்சி அளித்தது பயிற்சியின் நிரைவு விழா பல்கலைக்கழக MGR. வளாகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக் பாக்ஸிங் அசோசியேஷன் (TNSKA) 2022 வரை WAKO இந்தியா தேசிய அளவில் கிக்பாக்சிங் பயிற்சி முகாமை உருவாக்கியது.
தமிழ்நாடு மாநிலத்தில் கிக் பாக்ஸிங்கை ஒரு தீவிர விளையாட்டு முயற்சியாக ஊக்குவித்துப் பயிற்சியளித்தனர்.
இப்பயிற்சியின் நிரைவு விழாவில் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் திரு. செஞ்சி கே.எஸ். மஸ்தான், இந்துஸ்தான் பல்கலைக்கழக இயக்குநர் திரு G அசோக் வர்கீஸ் அவர்களும் , கலை அறிவியல் கல்லூரி இயக்குநர் டாக்டர்.சூசன் மார்த்தாண்டன் அவர்களும், இந்துஸ்தான் குழும நிறுவனங்கள் (HGI), டாக்டர் பிரதீப் வி. பிலிப் ஐபிஎஸ், முன்னாள் காவல்துறை இயக்குநர் மற்றும் தலைவர் – TNSKA, திரு. சந்தோஷ் கே அகர்வால், WAKO இந்தியா-தலைவர், திரு. S. கிஷோர், துணைத் தலைவர்-TNSKA, திரு. சுரேஷ் பாபு, பொதுச் செயலாளர்-TNSKA, மற்றும் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் சீ.திருமகன், துணை முதல்வர் திரு.சாமூவேல் சம்பத்குமார் ,மற்றும் பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்