எதிர்காலத்தை துள்ளியமாக கணிக்கும் கால் பெரு விரல் ரேகை ஜோதிடம்.!
சென்னை 17 ஏப்ரல் 2022 எதிர்காலத்தை துள்ளியமாக கணிக்கும் கால் பெரு விரல் ரேகை ஜோதிடம்.!
மனிதன் தோன்றிய காலம் முதல் நாகரீகமில்லாதபோது அவர்கள் ஓரிடத்தில் வாழ்ந்ததில்லை.
உணவு கிடைக்கும் இடம் தேடி கூட்டம் கூட்டமாக அலைந்த காலம்.
அதன் பின் ஓரிடத்தில் கூடி அதையே இருப்பிடமாக வைத்து தனித்தனியே காடுகளுக்குள் உணவு தேடிச் செல்லும் காலம்.
அப்படி செல்லும் பொழுது செல்லும் வழிகளில் சில அடையாளங்களில் காலடி (கால்தடம்) முக்கிய பங்கு வகித்தது.
அதே போல் காடுகளில் கொடூர மிருகங்களின் கால் பாதங்களின் அடையாளங்களைக் கண்டு அவ்வழிகளில் செல்லாமல் தன்னைப் பாதுகாத்துக்கொண்டு உயிர் வாழ்ந்தான்.
மேற்கண்ட சம்பவங்கள் என் மனதின் அடித்தளத்தில் ஆழமாய் பதிந்தபின் மனிதன் உயிரோடு பாதுகாப்பாக வாழ்வதற்கு, மனிதர்கள் நடமாடும் இடங்கள், மிருகங்கள் நடமாடும் இடங்கள் என பிரித்தறிந்து வாழ்க்கையை அமைத்துக் கொண்டு பாதுகாப்பாக வாழ்ந்ததையும் மற்றும் கை ரேகையினை வைத்து ஒருவருடைய கடந்தகால, நிகழ்கால, எதிர்கால வாழ்க்கையினை நாம் கணக்கிடுகின்றோம்.
குழந்தை எட்டி நடைபோட்டு தன் வாழ்க்கைப்பயணத்தை தொடங்குகிறது.
அது முதல் அக்குழந்தை வளர்ந்து தன் வாழ்நாள் முழுவதும் கால் பாதத்தினைப் பயன்படுத்தி அவன் போகும் பாதை நல்வழி, தீயவழி, முன்னேற்றம், பின்னடைவு அனைத்தையும் வாழ்க்கையில் சந்திக்கின்றான்.
கைகளில் இருப்பதைப் போன்று, கால் பாதங்களிலும் ரேகைகள் உள்ளன. இவற்றை ஆராய்ச்சிக்காக எடுத்துக் கொண்டு ஆராய்ந்தால் என்ன? என்ற எண்ணம் என் மனதில் ஏற்பட்ட உந்துதல் முதல் காரணம்.
ஓரடியில் உலகையே பெருமாள் அளந்ததாக ஐதீகம்.
மகாபாரதப் போரில் கர்ணன் கடைசியாக விட்ட நாகாஸ்திரத்திற்க்கு யாருமே தப்ப முடியாது என்ற நிலையில் தேரோட்டியாக இருந்த கண்ணன் தனது கால் பெருவிரலால் தேரை அழுத்தி அர்ச்சுணனைக் காப்பாற்றி, அதனால் மகாபாரதயுத்த களத்தின் முடிவே மாற்றி அமைந்ததாக மகாபாரதம் சொல்கிறது.
கண்ணபிரானின் கட்டை விரல்தான் மகாபாரதயுத்தத்தில் அர்ச்சுணனைக் காப்பாற்றி பாண்டவர்களின் வெற்றிக்கு அடிகோளியது என்பது எனது மனக்கண்ணின் முன் நிழலாடி இவ்வாராய்ச்சிக்கு என்னை இட்டுச் சென்றது.
பல்வேறு மனிதர்களின் பாதங்களில் முக்கிய பங்கு வகிக்கிற கால் பெருவிரல் அச்சு ரேகைகளை எடுத்து பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து, அந்த ரேகை எவ்வாறு அமைந்துள்ளது.
அந்த ரேகையை உடையவர் வாழ்க்கை முன்பு எப்படி இருந்தது.
தற்போது எப்படி உள்ளது என்பதைக் கண்டறிந்து அதன் மூலம் ஏற்பட்டதே இந்த கால் பெருவிரல் கை ஜோதிடம்.
கால் பெருவிரல் ரேகையில் அமைந்துள்ள பல கோடுகள் மனிதனின் வாழ்க்கையை நிர்ணயிக்கின்றவை என்பது கண்கூடான உண்மை.
கால் பெருவிரல் ரேகையை எடுத்து ஒவ்வொரு கோடுகளின் கணக்கீட்டினை கணித்து அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தையும், எதிர்காலத்தன்மையும் கூறக்கேட்டு அவர்கள் அடைந்த முன்னேற்றங்களை நேரில் வந்து சொல்லிச் செல்வதோடு மட்டுமில்லாமல் அதை பிறருக்கும் கூறுவதால் அன்றாடம் மக்கள் வந்த வண்ணம் உள்ளனர் என்பதே இதற்கு சாட்சி.
பிறந்த குழந்தைகளின் கால் பெருவிரல் ரேகையை எடுத்து கணித்து அதற்கு ஏற்றார்போல் பெயர் சூட்டினால் அவர்கள் எதிர்காலம் சிறப்படையும், புகழையும் பெறுவர் என்பது நிச்சயம்.
கால் பெருவிரல் ரேகையைக் கொண்டு யார், யார் எந்தெந்த தெய்வங்களை பிரியமாக வழிபடுவர் என்பதையும், அதனால் பலன் உண்டா? – இல்லையா? என்பதையும் கணிக்க முடியும்.
இக்கணிப்பில் யார், யார் எந்தெந்த தெய்வங்களை வழிபட்டால் மிகப்பெரிய நற்பலன்களை அடைய முடியும் என்பதையும் கூறமுடியும்.
இதனால் வாழ்க்கையில், வியாபாரத்தில் செய்யும் தொழிலில் தோல்வி கண்டவர்களுக்கும், திருமணம் தடைபட்டவர்களுக்கும், குழந்தைபாக்கியம் இல்லாதவர்களுக்கும் இன்னும் பல்வேறு பிரச்சனையில் உழன்று கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல தீர்வுகாண வழி கிடைக்கும்.
விஜய் சுவாமிஜி
ஸ்ரீ பைரவா பவுண்டேஷன் ,
காங்கயம் மெயின் ரோடு ,
அவல்பூந்துறை அஞ்சல்
ஈரோடு – 638 115 .
தமிழ்நாடு,
இந்தியா.
செல் :+91 9443351497 , 9842499006,
மின் அஞ்சல் : [email protected]