அதிக ரன் – விக்கெட் ஜோஸ்பட்லர் சாஹல் முதல் இடத்தில் உள்ளார்!

சென்னை 21 ஏப்ரல் 2022 அதிக ரன் – விக்கெட் ஜோஸ்பட்லர் சாஹல் முதல் இடத்தில் உள்ளார்!

ஐ.பி.எல். போட்டியில் நேற்றுடன் 32 ஆட்டங்கள் முடிந்துள்ளது.

இதில் அதிக ரன் குவிப்பில் ராஜஸ்தான் அணிக்காக ஆடும் இங்கிலாந்து வீரர் ஜோஸ்பட்லர் முதல் இடத்தில் உள்ளார்.

அவர் 6 ஆட்டத்தில் 2 சதம், 2 அரை சதத்துடன் 375 ரன்கள் எடுத்துள்ளார்.

லோகேஷ் ராகுல் (லக்னோ) ஒரு சதம், ஒரு அரை சதத்துடன் 265 ரன்னுடன் 2-வது இடத்திலும், டுபெலிசிஸ் 2 அரை சதம், 250 ரன்னுடன் 3-வது இடத்திலும் உள்ளார்.

பந்து வீச்சில் யசுவேந்திர சாஹல் முதல் இடத்தில் உள்ளார்.

ராஜஸ்தான் வீரரான அவர் 17 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.

குல்தீப்யாதவ் (டெல்லி) 13 விக்கெட்டும், நடராஜன் (ஐதராபாத்) 12 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர்.

ஐபிஎல் போட்டியில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் 5 பேர் பட்டியலில் தமிழக வீரர் நடராஜன் 3-இடத்தில் உள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *