தமிழ் மொழிகளை வழக்காடு மொழியாக்க நடவடிக்கை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேச்சு!

சென்னை 23 ஏப்ரல் 2022 தமிழ் மொழிகளை வழக்காடு மொழியாக்க நடவடிக்கை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேச்சு!

நீதித்துறை கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. மக்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்ய நீதித்துறையை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறினார்.

சென்னையில் இன்று நடந்த ஐகோர்ட்டு விழாவில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசியதாவது…

சிறு வயதில் நான் தமிழ்நாட்டுக்கு வந்தபோது நடந்த மொழிப் போராட்டம் நன்கு நினைவில் உள்ளது.

மொழி- கலாச்சாரத்தை காப்பாற்றுவதில் தமிழர்கள் முன்னணியில் உள்ளனர். துரித உணவுகளை போல் மக்கள் துரிதமான நீதியையும் எதிர்பார்க்கிறார்கள்.

பில்டர் காபியில் இருந்து, இன்ஸ்டன்ட் காபிக்கு மக்கள் மாறிவிட்டனர்.

காலங்கள் மாறிவிட்டது. 5 நாள் கிரிக்கெட்டில் இருந்து 20-20 கிரிக்கெட்டுக்கு மக்கள் மாறிவிட்டனர்.

தமிழ்நாடு பார் கவுன்சில்தான் நீதித்துறையின் அனைத்து விவகாரங்களையும் முதலில் முன்னெடுத்து செல்கிறது.

சமூக உண்மையை நீதிபதிகள் உணர்ந்து இருக்க வேண்டும்.

ஆக்கப்பூர்வமான தீர்வுகள் காணும்போது கண்மூடி சட்டத்தை மட்டும் நீதிபதிகள் சார்ந்திருக்கக் கூடாது.

மக்கள் தொகைக்கு ஏற்ப நீதிபதிகள் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும்.

நீதித்துறை கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது.

மக்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்ய நீதித்துறையை மேம்படுத்த வேண்டியது அவசியம்.

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளூர் மொழிகளை வழக்காடு மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒருவர் நீதித்துறையில் வருவதற்கு மொழி, இனம், சாதி, மதம், என எதுவும் தடையாக இருக்கக்கூடாது.

Read Also  ஸ்ரீபெரும்புதூர் அருகே பரந்தூரில் புதிய விமான நிலையத்தை அமைக்க மத்திய அரசு முடிவு!

பின்தங்கிய பகுதியில் இருந்து வரும் நீதிபதிகளால்தான் மக்கள் பிரச்சினைகளை புரிந்து தீர்க்க முடியும்.

இவ்வாறு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசினார்.

விழாவில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியதாவது…

சமூக நீதியை முன்னேற்றுவதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு நீதித்துறைக்கான இடம், கட்டிடம், பணியாளர், மின்னணு வசதிகளை ஏற்படுத்தி தந்து வருகிறது.

தமிழ்நாடு அரசு தொடர்ந்து தனிநபர் உரிமையை பாதுகாத்தும் குரல் கொடுத்தும் வருகிறது.

இவ்வாறு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசினார்.

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.எம்.சுந்தரரேஷ் பேசும்போது…

“வழக்கறிஞர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி.

இன்று வரலாற்றில் முக்கிய தினமாகும்”என்றார்.

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ராமசுப்பிரமணியன் பேசும்போது…

சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் விரைவாக முடிக்கப்பட்டு வருகிறது.

சாதனை படைக்கும் வகையில் உள்ளது.

தமிழ்நாடு பார் கவுன்சில் இன்று அரசோடு சேர்ந்து ஒரு மிகப்பெரிய உதவியை வழக்கறிஞர்களுக்கு செய்ய முன் வந்து இருக்கிறது.

எனவே அனைவருக்கும் என்னுடைய நன்றி” என்றார்.

விழாவில் இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் பிரபாகரன் நன்றி தெரிவித்தார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *