Veranda RACE -ல் பயின்று, வங்கி, மத்திய, மாநில அரசுப்பணி தேர்வுகளில் வெற்றி பெற்ற ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு பாராட்டு!!

சென்னை 24 ஏப்ரல் 2022 Veranda RACE -ல் பயின்று, வங்கி, மத்திய, மாநில அரசுப்பணி தேர்வுகளில் வெற்றி பெற்ற ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு பாராட்டு!!

சென்னை, 24 ஏப்ரல் 2022: வேலை வாய்ப்புகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்யும் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான வெராண்டா ரேஸ் (Veranda RACE), வெராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.

இந்த நிறுவனம் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கடின உழைப்பு மற்றும் முயற்சியின் பயனாக வங்கி, மத்திய, மாநில அரசுப்பணி தேர்வுகளில் வெற்றி பெற்ற ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களை பாராட்டுவதற்காக இன்று ஒருங்கிணைப்பு செய்துள்ளது.

வெராண்டா ரேஸ் நிறுவனம் ஆன் லைன் வாயிலாகவும், நேரடியாகவும் மிகவும் நிபுணத்துவமிக்க பயிற்சிகளை அளித்து வருகிறது.

அரசு மற்றும் வங்கி பணிகளுக்கான தேர்வுகளை எதிர்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு ஆண்டு முழுவதும் வழிகாட்டியாக இருந்து அவர்களை தயார்படுத்தி வருகிறது.

வெராண்டா ரேஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான இந்த 10-வது ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சியின் போது, வெராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் மற்றும் தலைவர், திரு. கல்பாத்தி எஸ். சுரேஷ், வெராண்டா ரேஸ் நிறுவனர் திரு. பரத் சீமான், வெராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்துதல் அதிகாரி, திரு. பிரவீன் மேனோன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தனர்.

தற்போது, தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள வெராண்டா ரேஸ் நிறுவனத்தின் 29 கிளைகளில், 18 வயது தொடங்கி 30 வயது வரையிலான சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

Read Also  உலகின் 18-வது தலைசிறந்த பல் மருத்துவக் கல்லூரியாக சவீதா பல் மருத்துவக் கல்லூரி தர வரிசைப் படுத்தப்பட்டுள்ளது!

பல்வேறு அரசு பொதுத்துறை பணிகளுக்கான தேர்வுகளுக்கு தயாராவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வெராண்டா ரேஸ் நிறுவனத்தில் தங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த சந்திப்பில், வெராண்டா ரேஸ் நிறுவனர் திரு. பரத் சீமான் (Mr. Bharath Seeman, Founder, Veranda RACE) பேசுகையில், “பல்வேறு அரசுப் பணி மற்றும் வங்கி, மத்திய மாநில போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று தற்போது வெற்றிகரமாக தங்களது வாழ்க்கையை நோக்கி செல்லும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை வாழ்த்துவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.

இந்தாண்டு 40 ஆயிரம் பேர் கொண்ட வலுவான வெராண்டா ரேஸ் குடும்பத்தில் புதிய மாணவர்கள் இணைகின்றனர்.

மாணவர்களின் வாழ்க்கை பாதை தொடங்குகிறது என்பதால், அவர்கள் தங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவதை உறுதி செய்யும் விதமாக, கற்றல் பயணத்தை தொடர, எங்கள் திறமையான பயிற்சியாளர்களும் ஊழியர்களும் பெருந்தொற்று பரவலுக்கு மத்தியிலும் மிகவும் கடுமையாக உழைத்தனர்” என்றார்.

தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (TNPSC) ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் (SSC), ரயில்வே தேர்வு வாரியம் (RRB) போன்ற தேர்வுகள் மற்றும் வங்கிப் பணி தேர்வுகள், காப்பீட்டு பணி தேர்வுகள் போன்ற பல்வேறு போட்டி தேர்வுகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்களுக்கு தேர்வுகள் தொடர்பான பயிற்சிகளை வெராண்டா ரேஸ் வழங்குகிறது.

வெராண்டா ரேஸ் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில்நுட்பம், செய்முறை மற்றும் வழிமுறை ஆகியவற்றை இணைத்து மிகவும் உயர்தரமான பாடதிட்டங்களை வழங்கி வருகிறது.

வெராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ் குறித்து..

Read Also  மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கும் எடுடெல் அகாடமி (EDUTEL ACADEMY).!

கல்பாத்தி ஏஜிஎஸ் குழுமத்தால் 2018-ல் நிறுவப்பட்ட, வெராண்டா லேர்னிங்க சொல்யூஷன்ஸ் நிறுவனம் பொதுவில் பட்டியலிடப்பட்ட கல்வி தொழில் நுட்ப நிறுவனமாகும்.

இது மாநில தேர்வாணைய தேர்வுகள், வங்கி, காப்பீடு, ரயில்வே, ஐஏஎஸ் மற்றும் சிஏ தொடர்பான தேர்வுகள் மட்டுமின்றி, திறன் மேம்பாட்டு திட்டங்கள் உள்பட இந்தியாவில் போட்டி தேர்வுகளுக்கு தயாராவதற்கான பயிற்சியை சமகால தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அளித்து வருகிறது.

வெராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ் நிறுவனம் வலுவான வழிகாட்டிகள், கல்வியாளர்கள் மற்றும் தொழில் நுட்ப வல்லுநர்களுடன் இணைந்து ஒரு வலுவான கற்றல் இணையதளத்தை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

வெராண்டா லேர்னிங் இணையதளமானது உயர்தர உள்ளடக்கத்தை வழங்குவதற்காக, தொழில் நுட்பம், செயல்முறைகள், வழிமுறைகள் ஆகியவற்றை கையாளுகிறது.

மாணவர்கள் மீது சிறந்த தாக்கத்தை உருவாக்கவும், மாணவர்களுக்கு கல்வியில் சிறந்த பயனை அளிக்கவும் கவனம் செலுத்தி வருகிறது. மல்டி மாடல் டெலிவரி முறையை பயன்படுத்துவதுடன், மிகவும் கண்டிப்புடனும், ஒழுக்கமாகவும் கற்றுக் கொள்வற்கான கட்டமைப்பை கொண்டுள்ளது.

வெராண்டா ரேஸ், வெராண்டா சிஏ, வெராண்டா ஐஏஎஸ், எட்யுரேகா [Veranda Race, Veranda CA, Veranda IAS, & Edureka] ஆகிய நான்கு துணை நிறுவனங்கள் மூலமாக, இந்நிறுவனம் சேவைகளை வழங்கி வருகிறது.

Brain4ce Education Solutions என்பது வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் பிராண்டாகும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published.