இந்திய இறையாண்மை எதிராக செயல்பட்டு வரும் மேலும் 16 யூடியூப் சேனல்களை தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் முடக்கியுள்ளது.
சென்னை 26 ஏப்ரல் 2022 இந்திய இறையாண்மை எதிராக செயல்பட்டு வரும் மேலும் 16 யூடியூப் சேனல்களை தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் முடக்கியுள்ளது.
தவறான தகவல்களை பரப்பி வரும் யூடியூப் சேனல்களுக்கு எதிராக இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கடும் நடவடிக்கை எடுத்துவருகிறது.
சமீபத்தில் 22 யூடியூப் சேனலுக்கு அதிரடியாக தடை விதித்தது.
இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்பட்டு வரும் மேலும் 16 யூடியூப் சேனல்களை தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் முடக்கியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் பாரதிய ஜனதா கட்சி அரசு பொறுப்பேற்ற பின் தகவல் தொழில்நுட்ப சட்ட வழிகாட்டுதல் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகளின் கீழ் அவசர கால அதிகாரங்களைப் பயன்படுத்தி உடனடியாக நடவடிக்கையை எடுக்கப்பட்டு வருகிறது.
இதில் 10 இந்திய யூடியூப் சேனல்கள் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த 6 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன.
இந்த சேனல்களின் வீடியோக்களுக்கு, 68 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தேசிய பாதுகாப்பு குறித்து தவறான தகவல் பரப்பிவருவதால் யூடியூப் சேனல்களை முடக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.