ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்  இயக்கத்தில் “யசோதா” திரைப்படத்தில் ஆக்சன் காட்சிகளில் அசத்தும் நடிகை சமந்தா !

சென்னை 20 மார்ச் 2022 ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்  இயக்கத்தில் “யசோதா” திரைப்படத்தில் ஆக்சன் காட்சிகளில் அசத்தும் நடிகை சமந்தா !

அனைத்து கதாப்பாத்திரங்களிலும் நடிப்பில் மிளிரும் சமந்தா, எந்த ஒரு கதாப்பாத்திரத்தையும் மிக எளிதாக செய்து அசத்திவிடுவார்.

ஒரு கலைஞராக நடிப்பிலும், கமர்ஷியல் பட நாயகியாகவும் ஒரே நேரத்தில் அசத்துபவர் தான் சமந்தா.

தற்போது ஹாலிவுட் சண்டைப் பயிற்சி அமைப்பாளர் யானிக் பென் ( Yannick Ben ) பயிற்சியில் “யசோதா” படத்தில் சண்டைக் காட்சியில் மிரட்டவுள்ளார்.

சமந்தா முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை ஹரி – ஹரீஷ் கூட்டணி இயக்குகிறது. ஶ்ரீதேவி மூவிஸ் சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் இப்படத்தை தயாரிக்கிறார்.

ஹாலிவுட் சண்டை பயிற்சியாளர் யானிக் பென் (Yannick Ben) ஹாலிவுட் படங்களான ‘Transporter 3’, ‘Project 7’, ‘Paris By Night Of Living Dead’, ‘City Hunter’, Christopher Nolan படங்களான ‘Inception’, ‘Dunkirk’, ஷாருக்கானின் ‘Raees’, சல்மான் கான் நடிப்பில் ‘Tiger Zinda Hai’, பவன் கல்யாண் நடிப்பில் ‘Attarintiki Daredi’, மகேஷ் பாபு நடிப்பில் 1 – Nenokkadine முதலான படங்களுக்கு சண்டைப்பயிற்சி அமைத்துள்ளார்.

இவர் நடிகை சமந்தா உடன் முன்னதாக ‘Family Man 2 இணைய தொடரில் பணியாற்றியுள்ளார்.

தற்போது யசோதா படம் மூலம் அந்த சண்டைக்காட்சிகளின் சாதனையை முறியடிக்கவுள்ளார்.

இதுகுறித்து தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் கூறுகையில்.., யானிக் பென் இயக்கத்தில் சமந்தா உள்ளிட்டோர் நடித்த முக்கிய ஆக்‌ஷன் காட்சிகளை 10 நாட்கள் படமாக்கியுள்ளோம்.

Read Also  Colors Tamil is all set to take audiences on a comical ride with the World Television Premiere of Inba Twinkle Lilly this July 10th!

3 விதமான செட்களில் படமாக்கிய அந்த சண்டைக் காட்சிகளில் சமந்தா அசாத்தியமான ஆக்‌ஷன் காட்சிகளை நடிக்க கடுமையாக உழைத்துள்ளார்.

தற்போது கொடைக்கானலில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

சமீபத்திய திரைப்படங்களில் நாயகியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களைப் போல் அல்லாமல் இப்படத்தில் ஆக்‌ஷன் எபிசோடுகள் மிக அபாரமாக இருக்கும்.

படத்தின் கதை மட்டுமின்றி இந்த ஆக்சன் காட்சிகளும் படத்தின் முக்கிய ஹைலைட்டாக இருக்கும். தற்போதைக்கு ஹைதராபாத்தில் பிரமாண்டமான செட்டில் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

3 கோடி செலவில் கலை இயக்குனர் அசோக் அந்த செட்டை வடிவமைத்துள்ளார்.

மே 1ஆம் தேதியுடன் முழு படப்பிடிப்பும் முடிவடையும் என எதிர்பார்க்கிறோம்.

ஒரு பரபரப்பான ஆக்‌ஷன் திரில்லராக இப்படம் படமாக்கப்பட்டு வருகிறது.

நடிகர்கள்: சமந்தா, வரலக்‌ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா ஷர்மா மற்றும் பலர்.

இசை: மணிசர்மா, வசனங்கள்: புலகம் சின்னராயனா, Dr. சல்லா பாக்யலக்‌ஷ்மி பாடல் வரிகள்: ராமஜோகையா சாஸ்திரி கிரியேட்டிவ் டைரக்டர்: ஹேமம்பர் ஜாஸ்தி ஒளிப்பதிவு: M.சுகுமார்
கலை: அசோக்
சண்டைகள்: வெங்கட்
எடிட்டர்: மார்த்தாண்டன், K.வெங்கடேஷ் லைன் புரடியூசர்: வித்யா சிவலெங்கா
இணை தயாரிப்பாளர்: சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி
இயக்கம்: ஹரி – ஹரிஷ்
தயாரிப்பாளர்: சிவலெங்கா கிருஷ்ண பிரசாத்

Related Posts

Leave a Reply

Your email address will not be published.