செல்ஃபி திரைப்பட தயாரிப்பாளர் சபரிஷ் அவர்களைப்  பாராட்டிய கலைப்புலி எஸ்.தாணு!!

சென்னை 27 ஏப்ரல் 2022 செல்ஃபி திரைப்பட தயாரிப்பாளர் சபரிஷ் அவர்களைப்  பாராட்டிய கலைப்புலி எஸ்.தாணு!!

கலைப்புலி எஸ்.தாணு பெருமையுடன் வழங்க டிஜி பிலிம் கம்பெனி தயாரிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் செல்ஃபி.

இதில், ஜி.வி.பிரகாஷ்குமார், வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ் மேனன், வாகை சந்திரசேகர், சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடித்திருந்தார்கள்.

இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான மதிமாறன் இயக்கி இருந்தார்.

ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருந்த இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவையும், எஸ்.இளையராஜா படத்தொகுப்பையும் செய்துள்ளனர்.

இப்படம் ஏப்ரல் 1ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்களில் வெளியானது.

மாணவர்களின் கல்வியை மையமாக வைத்து வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.

இதில், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர்கள் ஜி.வி.பிரகாஷ், டி.ஜி.குணாநிதி, நடிகை வர்ஷா பொல்லம்மா, தயாரிப்பாளர் சபரிஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

இதில் தயாரிப்பாளர் சபரிஷ் பேசும்போது…

எங்கள் செல்ஃபி படத்தை வெற்றியடைய செய்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படத்தை மிகப்பிரம்மாண்டமாக வெளியிட்ட தாணு சார் அவர்களுக்கு நன்றி.

மேலும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி.

படத்தில் நடித்த ஜி.வி.பிரகாஷ்குமார், கவுதம்மேனன் உள்பட அனைவருக்கும் நன்றி.

இந்தப்படம் மாணவர் சமுதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உருவாக்கிய படத்தின் இயக்குனர் உள்ளிட்ட டெக்னிஷியன்ஸ் அனைவருக்கும் நன்றி’ என்றார்.

இயக்குனர் சுப்பிரமணிய சிவா பேசும்போது…

இந்த செல்ஃபி படத்தின் வெற்றி விழாவை நன்றி விழாவாக மாற்றிருப்பது மகிழ்ச்சி.

அந்த மகிழ்ச்சிக்கு காரணம் தாணு சார் தான்.

Read Also  648 நபர்களுக்கு ரூ 6 லட்சம் மதிப்பில் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கிய தளபதி விஜய் மக்கள் இயக்கம்!

மேலும் பத்திரிகையாளர்களுக்கு நன்றி.

ஒரு மனிதனின் முக்கியமான தேவையை சரியாக சொன்ன படம் செல்ஃபி.

சாதாரண மனிதனுக்கு கல்வி நேர்மையாக சென்று சேர வேண்டும் என்பதை சிறப்பாக பேசப்பட்ட படம்.

கல்வி வியாபாரமாக மாறிவிட்டால் ஏழைகளுக்கு பெரிய கஷ்டம் என்பதை இப்படம் பேசியது.

பசியை போக்குவது தான் கல்வி. சில குறைகளை நீங்கள் எழுதியிருந்தீர்கள் அதற்கும் நன்றி.

இயக்குனர் மதிமாறன் அடுத்தப்படத்தை இன்னும் மிகச்சிறப்பாக தருவார்.

மதிமாறன் எந்தக் கீரிடமும் இல்லாமல் மேன்மையாக பழகும் தன்மை கொண்டவர்.

குணாநிதி மிகவும் நல்ல பையன்.

சபரிஷ் தயாரிப்பாளர் போல் அல்லாமல் மேனேஜர் போல் வேலை செய்தார்.

பணத்தைக் கையாளும் மனிதனுக்கு படபடப்பு வரும்.

ஆனால் சபரிஷ் ரிலாக்ஸாக இருந்தார்.

நன்றியுணர்வு தான் எல்லா உணர்வுகளுக்கு தாய்.

அந்த நன்றியை உங்களிடம் சொல்கிறோம்.

ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்தில் செட்டிலாக நடித்திருந்தார்.

அவர் சிரித்தால் அழகாக இருக்கும்.

அவர் மேலும் இதுபோல் படங்களை கொடுக்க வேண்டும்.

கவுதம் மேனன் மிகச்சிறப்பாக நடித்திருந்தார்” என்றார்.

நடிகை வர்ஷா பொல்லம்மா பேசும்போது…

ஒரு படம் எவ்வளவு நல்லாருந்தாலும் அதை மக்களிடம் சேர்க்க ஒரு சப்போர்ட் வேணும்.

எங்களுக்கு தாணு சாரின் சப்போர்ட் இருந்தது.

அவருக்கு நன்றி.

சபரிஷ் தான் இப்படத்தின் மூலம் அவருக்கும் நன்றி.

இயக்குநர் முதல்படமே மக்களுக்கான படமா எடுத்திருக்கீர்.

உங்களுக்கு வாழ்த்துகள்.

ஜிவி பிரகாஷின் நடிப்பை இப்படத்தில் என்சாய் செய்தேன்.

குணா மிகச்சிறப்பாக நடித்த்ருந்தார்.

அவருக்கு வாழ்த்துகள். சக்சஸ் மீட் என்பது சந்தோஷமானது.

அனைவருக்கும் நன்றி” என்றார்.

நடிகர் டி.ஜி.குணாநிதி பேசும்போது…

Read Also  கள்ளன் திரைப்படத்தை ஓட விடாமல் தடுக்கும் ஜாதி சங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க இயக்குனர் சந்திரா தங்கராஜ் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்.

‘தாணு சார், ஜி.வி.பிரகாஷ், மதிமாறன் உள்பட அனைவருக்கும் நன்றி.

குலதெய்வம் தான் குலம் காக்கும் என்பார்கள்.

இந்தப்படத்திற்கு தாணு சார் தான் குலசாமி.

ஜிவி சார் என்னை நல்ல என்கிரேஜ் செய்வார்.

இப்படி வேறு ஹீரோ இருப்பார்களா என்று தெரியாது.

நன்றி ஜி.வி.பிரகாஷ் சார்.

வர்ஷா கடினமான சூழலிலும் படத்தில் வந்து நடித்துக் கொடுத்தார்.

மதிமாறன் அண்ணன் என்னை ஒரு இஸ்லாமிய குடும்பத்தின் பின்னணி உள்ள பையனாக மாற்ற நிறைய விஷயங்களைச் சொல்லித் தந்தார்.

படத்தில் எல்லாரும் நன்றாக உழைத்து இந்தப்படத்தை வெற்றிகரமான படமாக்க உதவிய அனைவருக்கும் நன்றி” என்றார்.

இயக்குனர் மதிமாறன் பேசும்போது…

2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இப்படத்தை ஆரம்பித்தேன்.

அப்போது வெற்றிமாறன் சார் சொன்னார், நீ படம் எடுக்கிற பாராட்டுவாங்க. அதைவிட படத்தின் தயாரிப்பாளர் நல்லாருக்கணும் என்று சொன்னார்.

இன்றைக்கு வெற்றிமாறனை நினைத்துப் பார்க்கிறேன்.

ஜிவி இந்தப்படத்தில் எனக்கு ஒரு நண்பனைப் போல நடித்தார்.

குணா நடிப்பை அனைவரும் பாராட்டி வருவது மகிழ்ச்சி.

தாணு சார் தான் இந்தப்படத்தை நிறுத்தி நிதானமாக தியேட்டருக்கு எடுத்து வந்தார்.

தாணு சார் என்மேல் வைத்த நம்பிக்கைக்கு நன்றி.

என் டீம் அனைவருக்கும் மிக்க நன்றி” என்றார்.

ஜிவி பிரகாஷ் பேசும்போது…

நன்றி தாணு சார்.

சினிமாவில் அவர் ஒரு காட்பாதர்.

மதிமாறனுக்கு முதல் நன்றி.

இது முதலில் நல்ல படம். இந்த நல்ல படத்தில் நானும் இருந்தது மகிழ்ச்சி.

குணாநிதி, வர்ஷா, சுப்பிரமணிய சிவா, உள்பட அனைவருக்கும் நன்றி.

சின்ன பட்ஜெட்டில் எடுத்த இந்த படம், நல்ல லாபகரமான படமாக வந்ததில் ரொம்ப சந்தோஷம். படம் வெளிவருமுன்னே நல்ல லாபமாக மாற்றியவர் தாணு சார்.

Read Also  நகைச்சுவை நடிகர் விவேக் நினைவு நாளன்று புத்துயிர் பெற்றிருக்கும் கிரீன் கலாம், 1 கோடி மரங்களை விரைவில் நட திட்டம்.

படத்தை மிகச் சிறப்பாக எழுதிய பத்திரிகையாளர்களுக்கு நன்றி’ என்றார்.

கலைப்புலி எஸ்.தாணு பேசும்போது…

‘செல்ஃபி என்ற தலைப்பை வைத்து மதிமாறன் என்கிட்ட ஒப்புதல் கேட்டதும் சரி என்றேன்.

இந்தப்படத்தில் வேலை செய்த அனைவருக்கும் தொழில் பக்தி இருந்தது. எனக்கு மதிமாறனை கொடுத்த வெற்றிமாறனுக்கு நன்றி.

இந்தப்படத்தை நாம் எடுக்கணும்னு நினைச்சேன் தம்பிகள் கேட்டதும் சரி தயாரிங்க என்றேன்.

வெறும் 38 நாட்களில் இந்தப்படத்தை இவ்வளவு சிறப்பாக எடுத்ததிற்கு மதிமாறனை நிறைய சொல்லலாம்.

ஜி.வி.பிரகாஷ் நமக்கு கிடைத்த ஒரு நல் முத்து. செல்ஃபி படத்தில் ஜி.வி.பிரகாஷின் நடிப்பு மிகச்சிறப்பாக இருந்தது.

ஜி.வி.பிரகாஷ் இன்னும் உயரிய இடத்திற்குப் போகவேண்டும். தம்பி குணாநிதி திறமையாக நடித்திருக்கிறார்.

முதல்படம் என்று சொல்ல முடியாதளவிற்கு நடித்திருக்கிறார்.

160 அடி பாயக்கூடியவன்.

சபரிஷ் 30 வருடம் அனுபவ உள்ள தயாரிப்பாளர் போல செயல்படுகிறார்.

நல்ல படங்களை சபரிஷ் தயாரிக்க வேண்டும்.

கவுதம்மேனனிடம் ஒரு போன் பண்ணி சொன்னதும் உடனே நடிக்க ஒத்துக்கிட்டார்.

அவர் இயக்குனர் மதிமாறனை மிகவும் பாராட்டினார்.

வி.கிரியேஷன்ஸ் சார்பாக மதிமாறன் ஒருபடம் பண்ணணும்.

அதற்கு நான் இப்பவே ரூ.10 லட்சம் அட்வான்ஸ் கொடுக்கிறேன்.

இந்தப்படம் தியேட்டருக்குத் தான் வரணும்னு நினைச்சேன்.

இந்தப்படத்தைக் கொண்டாடிய பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி.

ஒரே ஒரு காட்சி போட்டுக்காண்பித்து நல்ல விலைக்கு விற்றுக் கொடுத்தேன்.

இப்படம் மிகப்பெரிய லாபத்தை ஈட்டியிருக்கிறது” என்றார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *