மே தினத்தன்று ஜீ தமிழ் தமிழா தமிழாவில் தூய்மை பணியாளர்களுடன் ஒரு கலந்துரையாடல், ஞாயிறு மதியம் 12 மணிக்கு!

சென்னை 27 ஏப்ரல் 2022 மே தினத்தன்று ஜீ தமிழ் தமிழா தமிழாவில் தூய்மை பணியாளர்களுடன் ஒரு கலந்துரையாடல், ஞாயிறு மதியம் 12 மணிக்கு.!

சென்னை : தமிழா தமிழா என்று விவாத நிகழ்ச்சி வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை 12 மணிக்கு ஜீ தொலைகாட்சியில் ஒளிபரப்பக்கின்றது.

இந்த நிகழ்ச்சியை இயக்குனர் கரு.பழனியப்பான் தொகுத்து வழங்குகிறார்.

இந்த நிகழ்ச்சியில் வாரம் தோறும் பல தலைப்புகளில் மக்கள் தங்களின் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.

அதைப்போல மே தினமான உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தூய்மை பணியாளர்களை சரியாக நடத்துகிறதா சமூகம்? என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சியை இல்லாமல் தூய்மை பணியாளர்களுடன் ஒரு கலந்துரையாடலாக நடைபெற்றது.  

மே ஒன்றாம் தேதியை உழைப்பாளா் தினமாக கொண்டாடுகிறோம் விடுமுறை நாளாகவும் அறிவிக்கிறோம்.

கடுமையான வேலை செய்யும் அனைவரும் உழைப்பாளிகள்தான். ஆனால்நம் வாழ்வில் அவசியமான உழைப்பாளிகள் இருக்கிறா்கள் அவா்களுக்கு உழைப்பாளா்தினத்திலும் விடுமுறையில்லை ஓய்வில்லை.  

நம்வீட்டு வாசலுக்கும் நம் தெருவுக்கும் அவா் வராதபோதுதான் அவா்களின் முக்கியத்துவம் புரிகிறது. அவா்களை முன்களப்பணியாளா் என்றும் தூய்மைபணியாளா் என்று அழைத்து வார்த்தைகளுக்கு வா்னம் பூசிக்கொண்டாலும் சமூகத்தின் பார்வை எப்படியிருக்கிரதென்றால், அது அவரின் வேலை கடமை அவர்தான் செய்யவேண்டும் என்று எளிய மனிதர்களிடம் வலிமையான வார்த்தைகளை வீசிவிட்டுப் போகிறோம் நம் வீட்டு குப்பைகளைப்போல், அந்த தூய்மைப்பனியாளா்களின் உள்ளக்குமுறல்களையும் சமூகத்தில் அவா்கள் சந்திக்கும் சவால்களையும் பிரச்சனைகளையும் இந்த உழைப்பாளர் தினத்தில் பதிவுசெய்ய விரும்பினோம்.

Read Also  ஸ்பெயினில் நடிகை நயன்தாராவின் கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகிறது!!!

தங்களுக்குள்ளேயே புலம்பிக் கொண்டு இருந்தவா்கள், தமிழா தமிழா நிகழ்ச்சி மூலம் பல நல்ல அனுபவங்களையும் துயரமான நிகழ்வுகளையும் பதிவு செய்தார்கள்.

நம் வாழ்வில் அவசியமான இவா்களை கொளரவிக்க விரும்பியதமிழா தமிழாபதக்கங்கள் அணிவித்தும், சன்மானங்கள் வழங்கி, பாராட்டியதோடு அவா்களுக்கு நல்ல விருந்து ஏற்பாடுசெய்து உள்ளம் மகிழச்செய்ததில் பெறுமைகொள்கிறோம்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *