பொருட்களின் விலையை அறிய “எனது விலைப்பட்டியல் எனது உரிமை” திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்த தகவல்.!

சென்னை 28 ஏப்ரல் 2022 பொருட்களின் விலையை அறிய “எனது விலைப்பட்டியல் எனது உரிமை” திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்
வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்த தகவல்.!

பொதுமக்கள் தாங்கள் வாங்கும் பொருட்களின் விலையை அறிய “எனது விலைப்பட்டியல் எனது உரிமை” திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி  சட்டப்பேரவையில் கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று 2022-23ஆம் ஆண்டிற்கான கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் மற்றும் 2022-23ஆம் ஆண்டிற் கான வணிகவரிகள், முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவுத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.

இதையடுத்து, வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி பதில் அளித்து பேசினார்.

அப்போது
பதிவுத்துறையில் கடந்த காலங்களில் நடந்த முறைகேடுகள், தவறான ஆவணப் பதிவுகளை கண்டறிந்து சரி செய்ய சிறப்பு புலனாய்வு குழு அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது.

வணிக வரி, பதிவுத்துறை அரசுக்கு வருவாய் ஈட்டுவதில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது.

கடந்த ஆண்டுகளை விட வணிக வரித் துறையில் வருவாய் அதிகரித்துள்ளது.

போலி பட்டியல் தயாரித்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அலுவலகங்களில் பணியாற்றும் பொது மக்களின் வசதிக்காக விடுமுறை நாட்களான சனிக் கிழமையும் சார் பதிவாளர் அலுவலகம் செயல்படும் என்றார்.

இதைத்தொடர்ந்து தாக்கல் செய்யப்படமால் வணிகவரித்துறை கொள்கை விளக்க குறிப்பில்  “எனது விலைப்பட்டியல் எனது உரிமை” திட்டம் கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Read Also  ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூபாய்.10,000/- ஓய்வூதியம் வழங்குவதற்கான ஆணைகள் - தமிழக முதல்வர் வழங்கினார்.

தமிழ்நாட்டில், பொதுமக்கள் தாங்கள் பெறும் பொருளுக்கான விலை பட்டியலை கேட்டுப்பெற “எனது விலைப்பட்டியல் எனது உரிமை” திட்டம் செயல்படுத்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வரி ஏய்ப்பை கண்டுபிடிக்க தேசிய தகவல் மையம் உருவாக்கியுள்ள GST மென்பொருள் வாங்கி பயன்படுத்தப்படும்.

வணிக வரித்துறையில் வரி ஏய்ப்பை தடுப்பதில் உதவுவோருக்கு வெகுமதி அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

பதிவுத்துறையில் கட்டிடக்கலை பணி மேற்கொள்வதற்காக பொறியியல் பட்டதாரிகளுக்கு “களப்பணி மேற்பார்வையாளர் உரிமம்” வழங்கும் திட்டம் அறிமுகப் படுத்தப்டும் .

திருமணச் சான்றிதழில் திருத்தம் செய்ய இணைய வழியாக விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் செய்யப்படும் .

பதிவுத் துறையில் ஆவண எழுத்தர் உரிமங்கள் புதிதாக வழங்கப்படும்

அரசின் முயற்சி காரணமாக 36 ஆயிரத்து 952 வணிகர்கள் புதிதாக தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர்.

இவ்வாறு வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி  கூறியுள்ளார்..

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *