இலங்கைக்கு அரிசி உணவு, மருந்துகளை பால்பவுடர் டின்கள் தமிழகத்திலிருந்து அனுப்ப அனுமதிக்க வேண்டும் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
சென்னை 29 ஏப்ரல் 2022 இலங்கைக்கு அரிசி உணவு, மருந்துகளை பால்பவுடர் டின்கள் தமிழகத்திலிருந்து அனுப்ப அனுமதிக்க வேண்டும் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்!
இலங்கை மக்களுக்கு ரூபாய்.123 கோடி மதிப்பிலான அரிசி, மருந்து வகைகள் மற்றும் பால்பவுடர் டின்கள் வழங்க தமிழக முதல்வர் முடிவு செய்துள்ளது.
இதற்கிடையே, இலங்கை தமிழர்களுக்கு உதவ அனுமதி கோரிய தமிழக அரசின் தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது…
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும்.
இலங்கை தமிழர்களுக்கு உதவ அனுமதி கோரிய தமிழக அரசின் தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
இலங்கை மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகளை தமிழ்நாட்டிலிருந்து அனுப்பி வைக்க மத்திய அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.