ஓசியில் இடியாப்பம் தராததால் இரண்டு பட்டதாரி இளைஞர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்த சிட்லபாக்கம் எஸ்12 காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார்!
சென்னை 05 மே 2022 ஓசியில் இடியாப்பம் தராததால் இரண்டு பட்டதாரி இளைஞர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்த சிட்லபாக்கம் எஸ்12 காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார்!
சென்னை ஜமீன் பல்லாவரத்தில் வசித்து வரும் பட்டாதாரி இளைஞரான சிலம்பரசன் என்பவர் குரோம்பேட்டை ராதாநகர் பிரதான சாலையில் காவல் சோதனை சாவடி அருகில் கடந்த ஒரு வருட காலமாக இடியாப்பம் புட்டு கடை நடத்தி வருகிறார்.
சிட்லபாக்கம் எஸ் 12 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டு இருப்பதால். அடிக்கடி இந்த கடையில் எஸ் 12 காவல்நிலைய காவலர் சுரேஷ் குமார் என்பவர் வந்து ஓசியில் இடியாப்பம் கேட்பார் கடையில் பணி புரிகின்றவர்கள் பயந்து இடியாப்பம் கொடுத்து அனுப்பிவிடுவார்
இரு தினங்களுக்கு முன்பு காவலர் சுரேஷ்குமார் வந்து இடியாப்பம் கேட்டுள்ளார் கடையில் வாடிக்கையாளர்கள் அதிகமாக இருந்ததால் இடியாப்பம் கொடுப்பதற்கு தாமதமாகிவிட்டது.
இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ்குமார் சிறிது நேரம் கழித்து வந்து இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த சிலம்பரசனையும் அவருடைய சகோதரர் விக்னேஷ்யையும் காவலர் சுரேஷ்குமார் காட்டுமிராண்டித்தனமாக தாக்கி இனிமேல் எனக்கு மாதமாதம் பணம் கொடுக்க வேண்டும் என்று அவர்களை மிரட்டி உள்ளார்.
நாங்கள் எதற்கு சார் உங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று சிலம்பரசன் கேட்டதற்கு அவரை கடுமையாக தாக்கியுள்ளார்.
பின்பு சிலம்பரசனையும் அவரது சகோதரர் விக்னேஷ்யையும் காவல் நிலையத்திற்கு காவல்துறை வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.
அதன் பின்பு காவல்நிலையத்தில் வைத்து இருவரையும் கடுமையாக தாக்கி ஆய்வாளர் மகுடீஸ்வரியிடம் ஒப்படைத்து பொய் வழக்கு பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்து உள்ளனர்.
தொடர்ந்து இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபட்டு வரும் எஸ்12 சிட்லபாக்கம் காவல்நிலைய காவலர் சுரேஷ் குமாரின் மீது மனித உரிமை ஆணையம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியில் வியாபாரம் செய்யும் வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கூறி வருகின்றனர்