ஜந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் அமைச்சர் அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் அறிவிப்பு.!

சென்னை 05 மே 2022 ஜந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் அமைச்சர் அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் அறிவிப்பு.!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவர் என சட்டப்பேரவையில் போக்கு வரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் அவர்கள் அறிவித்துள்ளார்.

தற்போது தமிழகத்தில் 3 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரை கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கபட்டு வருகிறது.

இந்த நிலையில் இனி ஜந்து வயது வரை குழந்தைகளுக்கு அனைத்து பேருந்துகளிலும் கட்டணம் வசூலிக்கப்படாது, அவர்கள் இலவசமாக பயணிக்கலாம் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் அவர்கள்
தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சில குறிப்பிட்ட பேருந்துகளில் மட்டும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *