ரெட்மி நோட் 11T சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வெளியீடு இணையத்தில் லீக் ஆன புதிய தகவல்!

சென்னை 05 மே 2022 ரெட்மி நோட் 11T சீரிஸ் ஸ்மார்ட் போன்கள் வெளியீடு இணையத்தில் லீக் ஆன புதிய தகவல்!

ரெட்மி நோட் 11T மற்றும் நோட் 11T  ப்ரோ ஸ்மார்ட்போன்களின் சீன வெளியீடு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

எனினும், இதைத் தொடர்ந்து ரெட்மி நோட் 12 சீரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

சியோமியின் ரெட்மி பிராண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் அதற்கு முந்தைய வெர்ஷன்களை விட அதிகளவு சிறப்பான செயல்திறன் கொண்டிருக்கும் என தெரிவித்து இருக்கிறது.

இநத மே மாதம் இந்த மாடல்களின் வெளியீடு நடைபெற இருப்பதை அடுத்து, ரெட்மி நோட் 11T மற்றும் நோட் 11T ப்ரோ மாடல்கள் பற்றிய புது தகவல்கள் வரும் நாட்களில் வெளியாகலாம்.

ரெட்மி நோட் 11T மற்றும் நோட் 11T ப்ரோ மாடல்களின் வெளியீடு பற்றி சியோமி நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ வெய்போ அக்கவுண்டில் தெரிவித்து இருக்கிறது.

வெளியீடு மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இவற்றின் அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

எனினும், புதிய ரெட்மி நோட் 11T சீரிஸ் மாடல்களில் மீடியாடெக் சிப்செட் வழங்கப்படும் என்றும் இவற்றின் விலை CNY 1599 இல் இருந்து CNY 2500, இந்திய மதிப்பில் ரூ. 18 ஆயிரத்து 400-இல் இருந்து ரூ. 29 ஆயிரத்து 700 வரை நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

இரு மாடல்களில் ரெட்மி நோட் 11T ப்ரோ ஸ்மார்ட்போனில் 144Hz LCD ஸ்கிரீன் வழங்கப்படும் என தெரிகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *