காரப்பாக்கத்தில் உள்ள அப்போலோ க்ரேடில் & சில்ரன்’ஸ் ஹாஸ்பிடல், குழந்தைப் பேற்றை எதிர் நோக்கியிருக்கும் தம்பதியினர்களுக்கு பெரும் மகிழ்ச்சியளிக்கும் மகப்பேறு திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது!!
சென்னை 07 மே 2022 காரப்பாக்கத்தில் உள்ள அப்போலோ க்ரேடில் & சில்ரன்’ஸ் ஹாஸ்பிடல், குழந்தைப் பேற்றை எதிர் நோக்கியிருக்கும் தம்பதியினர்களுக்கு பெரும் மகிழ்ச்சியளிக்கும் மகப்பேறு திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது!!
- மகப்பேறு குறித்து தம்பதியினர் கொண்டிருக்கும் கவலைகளைப் பூர்த்தி செய்வது, கருத்தரிப்பு காலத்தில் தம்பதியினருக்கு உண்டாகும் பயங்களிலிருந்து அவர்களை விடுப்பட செய்வது, தம்பதிகளிடையே ஆரோக்கிமான மற்றும் மகிழ்ச்சிகரமான கருத்தரிப்புக்கு மிக அவசியமான நேர்மறை எண்ணங்களை உருவாக்குவது ஆகியவற்றில் அக்கறை காட்டும் வகையில் ஒரு மாபெரும் திட்டத்தை அப்போலோ க்ரேடில் & சில்ரன்’ஸ் ஹாஸ்பிடல் பிரத்யேகமாக வடிவமைத்துள்ளது.
சென்னை, மே 7, 2022:, காரப்பாக்கம் அப்போலோ க்ரேடில் & சில்ரன்’ஸ் ஹாஸ்பிடல் (Apollo Cradle & Children’s Hospital) வெகு விரைவில் பெற்றோர்களாக மாறவிருக்கும் தம்பதியினர்களுக்கு, இதுவரையில் இல்லாத வகையில் பெரும் மகிழ்ச்சியளிக்கும் மகப்பேறு திட்டத்தை பிரத்யேகமாக வடிவமைத்துள்ளது.
இத்திட்டமானது கருத்தரிப்பின் ஆரம்ப காலம் முதல் பிரசவத்திற்கு பிறகான தாய்மையின் ஆரம்ப கால தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு மகிழ்ச்சிகரமான திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கருத்தரிப்பின் போது தம்பதியினரிடையே இருக்க வேண்டிய நம்பிக்கை மற்றும் பிரசவத்திற்கு தயாராக செய்யும் மனநிலை, இவை இரண்டிலும் எந்தவிதமான நெருக்கடியும் இல்லாமல், உற்சாகமாக எதிர்கொள்ள செய்வதையும் பிரசவம் மற்றும் புதிதாக பிறந்த குழந்தையை கவனித்து கொள்ள தயாராவதை ஊக்கப்படுத்துவதையும் இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.
அதனால் தம்பதியினர் தங்களது சந்தேகங்களை புரிந்து தெரிந்து கொள்வதற்கான கலந்துரையாடல்கள், அமர்வுகள், கருத்தரிப்பு என்ன என்பதை புரிந்து கொள்வதிலிருந்து, பிரசவம் வரையில் எந்தவிதமான சிக்கல்களும் இல்லாமல் தங்கு தடையில்லா அனுபவத்தை இத்திட்டம் அளிக்கிறது.
குழந்தைப் பேற்றை எதிர்நோக்கியிருக்கும் தம்பதியினர் மகப்பேறியல் மற்றும் குழந்தைப்பேறு மருத்துவர்களையும், சிறப்பு மருத்துவ நிபுணர்களையும் கொண்ட ஒரு சிறப்பு குழுவுடன் இணைக்கப்படுகின்றனர்.
கர்ப்பகாலத்திற்கு முந்தைய ஊட்டச்சத்து, கர்ப்பகாலத்தில் உடலில் ஏற்படும் மாற்றம், பிரசவத்தின் பல்வேறு கட்டங்கள், பிரசவ காலத்தில் உண்டாகும் வலியை எதிர்கொள்ள உதவும் மேலாண்மை, லாமேஸ் தொழில்நுட்பங்கள் (Lamaze techniques) உட்பட பல்வேறு பிரிவுகளில் மிகத்துல்லியமான தகவல்கள், பரிந்துரைகளை இந்த சிறப்பு குழு வழங்கும்..
இது பற்றி அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் மகப்பேறு மருத்துவத் துறை ஆலோசகரான டாக்டர் ராஜ்ஸ்ரீ ஜே சங்கர் (Dr.Rajsri J Shankar, Consultant-Obstetrician & Gynaecologist, Apollo Hospitals) பேசுகையில், ”உலகம் முழுவதும் சிசேரியன் சிகிச்சைகளின் விகிதம் அதிகரித்து வருவது கவலையளிக்கும் வகையில் உள்ளது. ஆதலால் சிசேரியன் அல்லாமல் வழக்கமான முறையில் மகப்பேறு நிகழ்வதற்கான விழிப்புணர்வையும், தயார்படுத்தலையும் தம்பதியினரிடம் ஏற்படுத்துவது சிசேரியன் நிகழ்வதற்கான வாய்ப்புகளை குறைக்கும் காரணிகளில் ஒன்றாக உள்ளது. கர்ப்பமடைதல், கருத்தரிப்பின் போது உண்டாகும் அச்சங்கள் குறித்து பெண்களுக்கு இருக்கும் கவலைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான குழந்தைப்பேறுக்கு அவசியமான நேர்மறை மனநிலையை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.
டாக்டர் சௌம்யா ராகவன், டாக்டர் ஜனனி ஐயர், டாக்டர் ராஜ்ஸ்ரீ ஜே சங்கர், டாக்டர் அமுதா ஹரி, டாக்டர் கார்த்திகா தேவி, டாக்டர் நித்யா பாபுகுமார் & டாக்டர் திவ்யாம்பிகை உள்ளிட்ட அனுபவமிக்க மகப்பேறியல் & மகப்பேறு மருத்துவ நிபுணர்கள் (obstetricians & gynaecologists) ஒன்றாகச் சேர்ந்து ஒரு குழுவாக, பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாடினர். இயற்கையான முறையில் நிகழும் பிரசவம், சி செக்ஷனுக்கு பிறகு பிறப்புறுப்பு மூலமான பிரசவம், மயக்கவியல் நிபுணர் & சிசு பராமரிப்பு நிபுணர் (anaesthetist & neonatologist) குழுவின் ஆதரவு பிரசவத்திற்கு எந்தளவிற்கு முக்கியம் []normal delivery, Vaginal Birth after C section, Importance of a support team of anaesthetist & neonatologist for better outcomes என்பது குறித்து கலந்துரையாடப்பட்டது. இதைத் தொடர்ந்து கர்ப்பம் தொடர்பான கட்டுக்கதைகளை களைதல்’ [“Debunking myths in pregnancy”] எனும் மிகச்சுவாரஸ்யமான குழு விவாதமும் நடைபெற்றது.