ஜீ தமிழ் வரும் மே 15, தமது நேயர்களுக்கு ஆச்சர்யங்களை அள்ளித் தரும்   பொழுது போக்கு நிகழ்ச்சிகள் நிறைந்த ஒரு சூப்பர் சண்டேவை வழங்கவுள்ளது!

சென்னை 12 மே 2022 ஜீ தமிழ் வரும் மே 15, தமது நேயர்களுக்கு ஆச்சர்யங்களை அள்ளித் தரும்   பொழுது போக்கு நிகழ்ச்சிகள் நிறைந்த ஒரு சூப்பர் சண்டேவை வழங்கவுள்ளது!

சென்னை, 12 மே 2022: அகண்டா திரைப்படத்துடன் துவங்கிய கோடை கொண்டாட்டத்தில் 7 ஞாயிறும் 7 புதிய திரைப்படங்களை ஒளிபரப்பவுள்ள ஜீ தமிழ், இந்த வாரயிறுதியை அடுத்த கட்ட பொழுது போக்கு கொண்டாட்டமாக மாற்றவுள்ளது.

வரும் சூப்பர் சண்டேவில் தமது ரசிகர்களுக்கு ஆச்சரியங்கள் நிறைந்த பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது.

ரஜினி தொடரின் சிறப்பு எபிசோடுடன் துவங்கவுள்ள இந்த கொண்டாட்டம், அதனைத் தொடர்ந்து உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ‘என்ன சொல்ல போகிறாய்’ காதல் திரைப்படமும்,  சூப்பர் குயின் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியையும் ஒளிபரப்பவுள்ளது. 

பரபரப்பான காட்சிகளும், சுவாரஸ்யங்களும் நிறைந்த ரஜினி தொடரின் சிறப்பு எபிசோட், ஞாயிறு மதியம் 2 மணிக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாகும்.

எதிர்பாராத திருப்பமாக, பார்த்திபன் ரஜினியிடம் தன் காதலை கூற, அவள் என்ன சொல்வது என்று தெரியாமல் திகைக்கிறாள்.

பார்த்திபன், ரஜினியின் உயிர் தோழியின் தம்பி என்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்புகிறாள்.

அவள் அவனது காதலை ஏற்றாளா இல்லையா என்பதை இந்த ஞாயிறு சிறப்பு ஒளிபரப்பில் காணலாம்!

பரபரப்புகள் நிறைந்த ரஜினி தொடரைத் தொடர்ந்து, உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்ன சொல்ல போகிறாய் திரைப்படம் மதியம் 3:30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

Read Also  'ஆர்ஆர்ஆர்'-ஐ தமிழகத்தில் 550 திரையரங்குகளில் திரு சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனம் இன்று வெளியிடுகிறது.

இத்திரைப்படம் நேயர்களை உணர்வு பூர்வமான ஒரு ரோலர் கோஸ்டர் பயணத்திற்கு அழைத்துச் செல்லும். தனக்கு நிச்சயமான பெண்ணின் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்கையில் ப்ரீத்தியின் (தேஜூ அஸ்வினி) மீது காதலில் விழும், விக்ரமின் (அஷ்வின் குமார்) கதையே இத்திரைப்படம்.

ஒரு எதிர்பாராத இந்த முக்கோணக் காதல் கதையில் விக்ரம் யாருடன் சேருவான் என்பதை அறிய விரும்பும் நேயர்களை இந்தப் படம் தொலைக்காட்சித் திரையுடன் கட்டிப்போடும் என்பது உறுதி.

மாலை நேரம், பொழுதுபோக்கு கொண்டாட்டம் அடுத்த கட்டத்திற்கு செல்லவுள்ளது.

ஆயிஷா, ஸ்ரீது கிருஷ்ணன், தேஜஸ்வினி, பார்வதி, மற்றும் கண்மணி மனோகரன் ஆகியோர் சூப்பர் குயின் பட்டத்தினை வெல்ல போட்டியிடவுள்ளனர்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ள இந்த பிரம்மாண்ட கிராண்ட் ஃபினாலேவில் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, மற்றும் நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கவுள்ளனர்.

நடிகர் அஷ்வின் குமார் செலிபிரிட்டி நடுவராக பங்கேற்கவுள்ளார்.

பிரபலங்கள் நேயர்களுக்கு பொழுது போக்கினை வழங்குவது உறுதி என்பது ஒருபக்கம் இருந்தாலும்; இந்நிகழ்ச்சியின் சுவாரஸ்யமான சவால்களும், எதிர்பாராத திருப்பங்களும் யார் கோப்பையை வெல்வார்கள் என்று நேயர்களை இருக்கையின் நுனியில் அமர்ந்து ரசிக்க வைக்கும். 

எதற்காக காத்திருக்கிறீர்கள்? அடுத்தடுத்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நிறைந்த இந்த  சூப்பர் சண்டேவை மதியம் 2 மணி முதல் இரவு 9:30 மணி வரை காணத்தவறாதீர்கள், உங்கள் ஜீ தமிழில் மட்டும்!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *