இலங்கையில்  ரணில் விக்ரமசிங்கே 6-வது முறையாக பிரதமர் பொறுப்பை ஏற்றுள்ளார்.

சென்னை 14 மே 2022 இலங்கையில்  ரணில் விக்ரமசிங்கே 6-வது முறையாக பிரதமர் பொறுப்பை ஏற்றுள்ளார்.

அவரது தலைமையிலான மந்திரி சபையில் இணைய எதிர்க்கட்சிகள் மறுப்பு தெரிவித்து உள்ளன.

இலங்கையின் சுதந்திர வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடி, அந்த நாட்டை பதம் பார்த்துள்ளது.

இதனால் ஆளும் ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக மக்களின் போராட்டம் தீவிரமடைந்தது.

ஒரு மாதத்துக்கும் மேலாக அமைதியாக நடந்து வந்த இந்த போராட்டத்தில் கடந்த 9-ந்தேதி வன்முறை மூண்டதால் 9 பேர் உயிரிழந்தனர்.

300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்களை தொடர்ந்து பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார்.

ஆனாலும் நாட்டில் அரசியல் குழப்பம் நீடித்து வந்தது.

மகிந்த ராஜபக்சே பதவி விலகியதை தொடர்ந்து, புதிய பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சிகளும் இணைந்த இடைக்கால அரசு அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே நடவடிக்கை எடுத்தார்.

இது தொடர்பாக எதிர்க் கட்சிகளுடன் அடுத்தடுத்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தைகளின் முடிவில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிடம் (வயது 73) பிரதமர் பதவியை ஒப்படைத்தார்.

அவரும் நாட்டின் 26-வது பிரதமராக நேற்று முன்தினம் மாலையில் பதவியேற்றுக் கொண்டார்.

ஐக்கிய தேசிய கட்சி சார்பில் இலங்கை நாடாளுமன்றத்தில் ஒரே எம்.பி.யாக பதவி வகித்து வரும் ரணில் விக்ரமசிங்கே, 6-வது முறையாக பிரதமர் பொறுப்பை ஏற்றுள்ளார்.

அவர் நேற்று தனது அலுவலகத்தில் பணிகளை தொடங்கினார்.

Read Also  அமைச்சர் கார் செல்லும் வரை காத்திருந்த ஆம்புலன்ஸ்: சமூக ஆர்வலர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.!

இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்ற போதும், அரசுக்கு எதிரான போராட்டங்கள் ஓயவில்லை.

தலைநகர் கொழும்பு உள்பட பல இடங்களில் மக்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், டெம்பிள் ட்ரீஸ் மற்றும் கலே பகுதியில் அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக சதித்திட்டம் தீட்டி குற்றச்செயலில் ஈடுபட்ட மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட 7 பேரை கைது செய்ய குற்றப்பிரிவு விசாரணை துறைக்கு உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் கொழும்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *