ரியல்மியின் புதிய வகையான ஸ்மார்ட் வாட்ச் மாடல் இந்திய சந்தையில் வெளியீட்டு தேதி அறிவிப்பு.!
சென்னை 16 மே 2022 ரியல்மியின் புதிய வகையான ஸ்மார்ட் வாட்ச் மாடல் இந்திய சந்தையில் வெளியீட்டு தேதி அறிவிப்பு.!
ரியல்மி நிறுவனம் மே 18 ஆம் தேதி இந்திய சந்தையில் புதிய ரியல்மி டெக்லைஃப் வாட்ச் SZ100 ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
புது விதமான ஸ்மார்ட்வாட்ச் அறிமுக தேதி பற்றிய விவரங்கள் அந்த நிறுவன வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்வாட்ச் ரியல்மி நிறுவனத்தின் டெக்லைஃப் பிராண்டின் கீழ் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
இதில் 1.69 இன்ச் HD கலர் டிஸ்ப்ளே, ஸ்கின் மற்றும் பாடி டெம்பரேச்சர் மாணிட்டர் இதய துடிப்பு டிராக்கர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 12 நாட்கள் வரையிலான பேட்டரி பேக்கப் வழங்கும் என கூறப்படுகிறது.
இந்த மாடல் ரியல்மி நிறுவனம் மார்ச் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருந்த ரியல்மி டெக்லைஃப் S100 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் என கூறப்படுகிறது.
புதிய ரியல்மி டெக்லைஃப் வாட்ச் SZ100 மாடல் இரண்டு வெவ்வேறு நிறங்களில் கிடைக்கும் என்றும் இத்துடன் செவ்வக வடிவம் கொண்ட டையல், பக்கவாட்டில் நேவிகேஷன் பட்டன், 1.69 இன்ச் HD கலர் டிஸ்ப்ளே உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
மேலும் பல்வேறு பில்ட் இன் அம்சங்களான ரிமைண்டர்கள், காலண்டர் மற்றும் வானிலை சார்ந்த அப்டேட்கள் வழங்கப்படுகிறது.