ஒவ்வொரு ராசிக்காரர்களும் வழிபடவேண்டிய விநாயகர் மற்றும் சொல்லவேண்டிய கணபதி மந்திரம்.!

சென்னை 16 மே 2022 ஒவ்வொரு ராசிக்காரர்களும் வழிபடவேண்டிய விநாயகர் மற்றும் சொல்லவேண்டிய கணபதி மந்திரம்.!

12 ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய முதல் கடவுளான விநாயகர் ரூபங்கள் மற்றும் அவர்கள் சொல்ல வேண்டிய கணபதி மந்திரங்களை பார்ப்போம்.

மேஷம் ராசிக்காரர்கள்.

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாக கொண்ட வீரமிக்கவரான மேஷ ராசியினர் வீர கணபதியை வழிபட வேண்டும்.

மேஷம் ராசிக்கான கணபதி மந்திரம்

கரஸ்த கதலீசூத பனசேஷூ கபித்தகம் பாலசூர்ய ப்ரபம் வந்தே தேவம் பாலகணபதிம்.

ரிஷபம் ராசிக்காரர்கள்.

சுக்கிரனை அதிபதியாக கொண்ட ரிஷப ராசியினர் வெற்றிகளைக் குவிக்கக் கூடியவர்கள். இவர்கள் வித்ய கணபதியை வழிபடுவது நல்லது.

ரிஷபம் ராசிக்கான கணபதி மந்திரம்

நாளிகேராம்ர கதலீகுட பாயச தாரிணம் சரத் சந்த்ரா பவபுஷம் பஜே பக்தி கணாதிபம்

மிதுனம் ராசிக்காரர்கள்.

புதன் பகவானை அதிபதியாக கொண்ட மிதுன ராசியினர் அருள் பெற லட்சுமி கணபதியை வழிபடுவது சிறப்பானதாகும்.

மிதுனம் ராசிக்கான கணபதி மந்திரம்

ஆலிங்க்ய தேவீம் ஹரிதாங்க்ய புஷ்டிம் பரஸ்பராக்லிஷ்ட நிவேசம் சத்யா ருணம் பாசஸ்ருணி வஹந்தம் பயாபகம் சக்தி கணேசமீடே

கடகம் ராசிக்காரர்கள்.

சந்திர பகவானை அதிபதியாக கொண்ட கடக ராசியினர் ரோம்ப கணபதி உருவத்தை வழிபட நல்லருள் கிடைக்கும்.

கடகம் ராசிக்கான கணபதி மந்திரம்

பக்வசூத பலபுஷ்பமஞ்சரீ இக்ஷூதண்ட திலமோத கைஸ்ஸஹ! உத்வஹஞ் பரசுஹஸ்த தே நம: ஸ்ரீ சம்ருத்யுத தேவ பிங்கல

சிம்மம் ராசிக்காரர்கள்.

Read Also  ஜோதிட சாஸ்திரப்படி உங்களது வாழ்க்கைத்துணை அமையும் திசை!

சூரிய பகவானை அதிபதியாக கொண்ட தைரியமிக்க, ஆளுமை கொண்ட சிம்ம ராசியினர், மேலும் வெற்றிகளை குவிக்க விஜய கணபதியை வழிபடுவது நல்லது.

சிம்ம ராசிக்கான கணபதி மந்திரம்

நீலாப்ஜம் தாடீமீ வீணா சாலீகுஞ்ச அட்ச சூத்ரகம் ததது உச்சிஷ்ட நாமாயம் கணேச பாது மே சக:

கன்னி ராசிக்காரர்கள்.

புதன் பகவானை அதிபதியாக கொண்ட மென்மையானவர்களான மிதுன ராசியினர் மோகன கணபதியை வழிபட்டு வர எல்லா நன்மைகளூம் உண்டாகும்.

கன்னி ராசிக்கான கணபதி மந்திரம்

தந்த கல்ப லதா பாசம் ரத்ந கும்ப அங்குசோஜ்வலம் பந்தூக கமநீயாபம், த்யாயேத் க்ஷிப்ர கணாதிபம்

துலாம் ராசிக்காரர்கள்.

சுக்கிரனை பகவானை அதிபதியாக கொண்ட வெற்றியை ருசிக்கக் கூடிய துலாம் ராசியினர் வெற்றி கணபதியை வணங்கி வருவது நல்லது.

துலா ராசிக்கான கணபதி மந்திரம்

பாசாங்குச ஸ்வதம்தாம்ர பலவான் ஆகுவாகன: விக்நம் நிஹந் துந ஸர்வம் ரக்த வர்ணோ விநாயக:

விருச்சிகம் ராசிக்காரர்கள்.

செவ்வாய் பகவானை அதிபதியாக கொண்ட விருச்சிக ராசியினர், சக்தி கணபதியை வணங்கி வர எல்லாம் நன்மையாக மாறும்.

விருச்சிக ராசிக்கான கணபதி மந்திரம்

சிந்தூரபலம் நிபானனம் த்ரிநயனம் ஹஸ்தேச பாசாங்குஸௌ: பிப்ராணாம் மதுமத் கபாலம் அதிசம் சாது சிந்து மௌலீம் பஜே:

தனுசு ராசிக்காரர்கள்.

குரு பகவானை அதிபதியாக கொண்ட தனுசு ராசியினர் சங்கடஹர கணபதியை வணங்கி வருவது நல்லது.

தனுசு ராசிக்கான கணபதி மந்திரம்

சங்கேஷூ சாபருகமேஷூ மேஷகுடாரபாச சக்ரம் விக்நேச்வரோ விஜயதே தபநீய கௌரம்

Read Also  தொழில் செய்யும் இடத்தில் இநத படங்களை வைத்தால் அதிஷடம் உங்கள் கையில் இருக்கும்.!

மகரம் ராசிக்காரர்கள்.

சனி பகவானை அதிபதியாக கொண்ட மகர ராசியினர் யோக கணபதியை வழிபட்டு வர அனைத்து துன்பங்களும் நீங்கி யோகங்கள் உண்டாகும்.

மகர ராசிக்கான கணபதி மந்திரம்

ஹரித்ராபம் சதுர்பாஹும் ஹரித்ரா வதனம் ப்ரபும் பாசாங்குச தரம் தேவம் மோதகம் தந்த மேவ ச பக்தா மய ப்ரதாதாரம் வந்தே விக்ந விநாசனம்

கும்பம் ராசிக்காரர்கள்.

சனி பகவானை அதிபதியாக கொண்ட கும்ப ராசியினர் சித்தி விநாயகரை வணங்கி வர அனைத்து நன்மையில் முடியும்.

கும்பம் ராசிக்கான கணபதி மந்திரம்

லம்போதரம் ஸ்யாமநிபம் கணேசம் கடாக்ஷம் அட்ச ஸ்ரஜ ஊர்த்வகாப்யாம் ஸலட் டுகம் தந்த மரக்யாப்யாம் வாமேதராப்யஞ்ச ததானமீடே

மீனம் ராசிக்காரர்கள்.

குரு பகவானை அதிபதியாக கொண்ட மீன ராசியினர் பால கணபதியை வணங்கி வர காரியசித்தி அடையும்.

மீனம் ராசிக்கான கணபதி மந்திரம்

பாசாங்குச ஸ்வதந்தாம்ர பலவா நாஹ வாஹந: விக்னம் நிசந்துரு: சோன ஸ்ருஷ்டி தஷோ விநாயக..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *