உங்கள் பிறந்த தேதிப்படி உங்களது வீட்டிற்கு வரும் அதிர்ஷ்ட தேவதை!!!

சென்னை 16 மே 2022 உங்கள் பிறந்த தேதிப்படி உங்களது வீட்டிற்கு வரும் அதிர்ஷ்ட தேவதை!!!

உங்கள் பிறந்த தேதியின் அடிப்படையில் அந்தந்த தேதிக்கு ஒரு அதிர்ஷ்ட தேவதை உண்டு.

உங்களுடைய குணம் செய்யும் காரியங்கள் நடக்கும் முறைக் கேற்ப உங்களுக்கு நன்மைகளை தருவாள்.

அந்தந்த அதிர்ஷ்ட தேவதைகளுக்குரிய பொருட்களிய வீட்டில் வாங்கி வைத்தால் உங்களுக்கு அனுகூலங்கள் கூடிய விரைவில் கிடைக்கப்படுகிறது என அர்த்தம்.

அந்த வகையில் உங்கள் பிறந்த தேதிக்கு அதிர்ஷ்டம் தரக் கூடிய பொருள் என்ன என்று பார்க்கலாம் வாருங்கள்…

1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஒன்றாம் எண்ணுக்கு உரியவர்கள். இவர்கள் வீட்டில் மரத்தால் ஆன புல்லாங்குழலை வீட்டின் வடக்கு திசையில் வைத்திருப்பது நல்ல அதிர்ஷ்டத்தை கண்டிப்பாக தரும்.

2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இரண்டாம் எண்ணுக்கு உரியவர்கள். இவர்கள் வீட்டில் வெண்மை நிற பொம்மை ஒன்றை வடக்கு திசையில் வைத்து வர நலம் பெருகும்.

இப்படி செய்வதன் மூலம் அந்த வெண்ணிற பொம்மை வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.

இதனால் வீட்டில் சண்டை சச்சரவுகள் இருக்காது.

3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் மூன்றாம் எண்ணிற்கு உரியவர்கள்.

இவர்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய பொருள் ருத்திராட்சம்.

இவர்கள் தங்கள் இல்லத்தின் வடகிழக்கு திசையில் உயர்வான இடத்தில ருத்ராட்சத்தை வைப்பது சால சிறந்ததாகும்.

இதனால் வீட்டில் நிலையான நிம்மதியும் குறையாத செல்வமும் இருந்து வரும்.

4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் நான்காம் எண்ணிற்கு உரியவர்கள்.

Read Also  எந்த திதிகளில் விநாயகர் வழிபாடு செய்தால் விசேஷ பலன்கள் என்ன !

இவர்கள் ஒரு நிலைக்கண்ணாடியை வீட்டின் தென்மேற்கு திசையில் வைப்பது இவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகளை உருவாக்கி தரும்.

தென்மேற்கு திசையில் வைக்கப்பட்ட கண்ணாடியை எப்போதும் உடையாமல் பார்த்து கொள்வது அவசியமாகும்.

5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஐந்தாம் எண்ணிற்கு உரியவர்கள்.

இவர்கள் வீட்டின் வடக்கு திசையில் குபேரர் படத்தையோ அல்லது மஹாலட்சுமி படத்தையோ வைத்து வழிபட்டு வர வேண்டும்.

குபேரர் படம் என்பது சிரிக்கும் புத்தர் அல்லது புத்தர் படம் அல்ல.

உண்மையான குபேரர் படத்தை வைத்திருக்க வேண்டும்.

இதனால் வீட்டில் செல்வம் பெருகும்.

6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஆறாம் எண்ணிற்கு உரியவர்கள்.

இந்த எண்ணிற்கு உரியவர்கள் வீட்டில் வைத்திருக்க வேண்டிய பொருள் மயில் இறகு.

வீட்டின் தென் கிழக்கு திசையில் இவர்கள் மயிலிறகை வைத்திருப்பதன் மூலம் எப்பொழுதும் செல்வம் குறையாமல் வளர்ந்து கொண்டே இருக்கும்.

7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஏழாம் எண்ணிற்கு உரியவர்கள்.

இந்த எண்ணிற்கு உரியவர்கள் வீட்டில் வைத்துக்க வேண்டிய பொருள் ருத்ராட்சம்.

வீட்டின் தென்கிழக்கு திசையில் இவர்கள் ருத்திராக்ஷம் வைத்திருப்பதன் மூலம் வீட்டில் நிம்மதி நிலவும்.

சந்தோஷம் பெருகும். ருத்திராக்ஷம் நல்ல கருஞ்சிவப்பு வண்ணத்தில் இருக்குமாறு பார்த்து வாங்க வேண்டும்.

8,17,26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எட்டாம் எண்ணிற்கு உரியவர்கள்.

இவர்கள் வீட்டில் வைக்க வேண்டிய பொருள் கருப்பு நிற கிரிஸ்டல்.

வீட்டின் தென் திசையில் கருப்பு நிற கிறிஸ்டலை இவர்கள் வைத்திருந்தால் தீமைகள் அண்டாமல் செல்வ வளம் இவர்கள் வீடு தேடி வரும். நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.

Read Also  சாய்பாபா சன்னதியில் சுமங்கலிப் பெண்களுக்கு வஸ்திரம் வழங்கிய நடிகர் ஸ்ரீராம்.

9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ஒன்பதாம் எண்ணிற்கு உரியவர்கள்.

இவர்கள் வீட்டில் வைத்திருக்க வேண்டிய பொருள் பிரமிட்.

வீட்டின் தென்திசையில் இவர்கள் பிரமிட் வைப்பதன் மூலம் அதிர்ஷ்ட வாய்ப்புகள் வீடு தேடி வரும்.

நல்ல எண்ணங்கள் நிலைத்திருக்கும்.

இவை அனைத்தும் நம்பிக்கையோடு செய்தால் பலன் நிச்சயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *