நடிகை நிக்கி கல்ராணியை கரம் பிடித்தார் நடிகர் ஆதி.!
சென்னை 19 மே 2022 நடிகை நிக்கி கல்ராணியை கரம் பிடித்தார் நடிகர் ஆதி.!
தமிழ்த் திரைப்பட உலகில் முன்னணி திரைபிரபலமான நடிகர் ஆதி – நடிகை நிக்கி கல்ராணி ஜோடியின் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
தமிழ்த் திரைப்பட உலகிற்கு டார்லிங் திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி.
தொடர்ந்து யாகாவா ராயினும் நாகாக்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், நெருப்புடா, கலகலப்பு-2, சார்லி சாப்ளின் உள்பட பல திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.
நடிகை நிக்கி கல்ராணியும், நடிகர் ஆதியும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்த வண்ணம் இருந்தது.
இருவரும் யாகவா ராயினும் நாகாக்க திரைப்படத்தில் இணைந்து நடித்த போது காதல் வயபட்டதாக கூறப்பட்டது.
இதனை அவர்கள் மறுக்கவில்லை.
நடிகர் ஆதி வீட்டில் நடந்த குடும்ப நிகழ்ச்சிகளில் நடிகை நிக்கி கல்ராணி பங்கேற்ற புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி நெருக்கத்தை உறுதிப்படுத்தியது.
தமிழ்த் திரைப்பட உலகிற்கு மிருகம் திரைப்படத்தின் முலம் ஆதி அறிமுகமானார்.
அதன்பின் ஈரம், அய்யனார், அரவான், மரகத நாணயம், யு டர்ன் ‘யாகாவாராயினும் நாகாக்க’, மரகத நாணயம்’
உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து இருக்கிறார்.
நடிகர் ஆதி. சமீபத்தில் ’கிளாப்’ திரைப்படத்தில் நடித்து நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.
நடிகை நிக்கி கல்ராணிக்கும், நடிகர் ஆதிக்கும் திருமண ஏற்பாடுகள் நடப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி பிறகு நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாக நடிகை நிக்கி கல்ராணி கூறியிருந்தார்.
அது குறித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில், நடிகர் ஆதி நடிகை நிக்கி கல்ராணி ஜோடியின் திருமணம் நடைபெற்றுள்ளது.
இதில் நடிகர் ஆர்யா – நடிகை சாயிஷா, மெட்ரோ சிரீஷ் என ஏராளமான திரைபிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.