மாமல்லபுரத்தில் ‘44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த கூடுதல் அரங்கம்- பணிகள் தீவிரம்.!
சென்னை 19 மே 2022 மாமல்லபுரத்தில் ‘44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த கூடுதல் அரங்கம்- பணிகள் தீவிரம்.!
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், இப்போட்டியை நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 23 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னையை அடுத்த
மாமல்லபுரம் அருகில் பூஞ்சேரியில் உள்ள “போர் பாயிண்ட்ஸ்” அரங்கத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10ந் தேதி வரை 44வது சர்வதேச “செஸ் ஒலிம்பியாட்” விளையாட்டு போட்டி நடக்க உள்ளது.
இதில் 150 நாடுகளைச் சேர்ந்த 2,500 வீரர்கள் பங்கேற்கிறார்கள்.
விளையாட்டு அரங்கம் அமைக்க 70 ஆயிரம் சதுர அடி பரப்பளவு இடம் மற்றும் மின் ஒளி விளக்குகள் அமைக்க 2,000 கி.வா, மின்சாரமும் தேவைப்படுகிறது.
தற்போது தேர்வு செய்யப்பட்ட அரங்கத்தில் இந்த வசதிகள் இல்லாததால், அருகே கூடுதலாக 55 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மற்றொரு அரங்கம் அமைக்க அரசால் உத்தரவிட்டுள்ளது.
இதை அடுத்து “போர் பாய்ண்ட்ஸ்” வாகன நிறுத்தம் பகுதியை அரங்கமாக மாற்றும் பணி துவங்கியது.
அங்கிருந்த 20க்கும் மேற்பட்ட மரங்கள் அகற்றப்பட்டன.
புதிய டிரான்ஸ்பார்ம் அமைக்கும் பணிகளையும் மின் வாரியத்தினர் துவங்கி உள்ளனர்.
போட்டி ஏற்பாடுகளை ஒருங்கிணைக்க அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ள, தமிழ்நாடு கதர் கிராம தொழில்கள் தலைமை நிர்வாக இயக்குனர் சங்கர் மேற்பார்வையில் பணிகள் நடந்து வருகிறது.