பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார் பாஜக தலைவர் அண்ணாமலை !
சென்னை 21 மே 2022 பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார் பாஜக தலைவர் அண்ணாமலை !
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இதனால், பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய்.9.50 டீசல் லிட்டருக்கு ரூபாய்.7.00 விலை குறையும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்த நிலையில், தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.